வியாழன், 3 ஜூன், 2010

மீண்டும் என் காதலிக்கு ...............


உன் சிரிப்பின் வரைவிலக்கணம்தெரியாமல் எத்தனை முறை குட்டு பட போகிறேனோ தெரியவில்லைகாதலிடம் விளங்கி கொள்ள முடியாதபாடங்கள் உன்னை எனக்குநினைவுக்கு கொண்டு வந்துபோகின்றன .ஊசியில்நூல் நுழைக்க முயலும் குருட்டு தையல் காரனாய் நான் உன் இதயத்துக்குள்நுழைய வழி பார்கிறேன்

கவிதை எழுத தெரியாதே !பெண்ணே உன்னைபார்க்கும் வரையிலே !நாள்தோறும் உன் முகம்தேடி வந்தேன் என் முகம்மறக்கும் வரை !!இதுதான் காதலோ !! உன்னில்என்னைத் தொலைத்தேனே ...

நினைவுகளில் நீ.....


மனதில் உன்னை எழுதி வைத்தேன்...மறக்கக் கூடாது என்பதற்கு அல்ல...மறுபடியும் உன்னை...மறந்தும் நினைக்கக் கூடாது என்பதற்கே.....!!!

உன்னை ஒன்று கேட்பேன்...


பார்த்தாலோ நீ தென்றல்...பழகிய பின் ஏன் புயலானாய்...?? மிஞ்சினால் கெஞ்சும் இந்தக் காலத்தில்...நான் கெஞ்சியும் நீ மிஞ்சுகிறாயே......ஏன் பெண்ணே...!!!

கண்ணாமூச்சி ஏனடா.....


உன்னருகில் நானிருக்கஎன் மனமோ தவிக்கிறதே...உன் நினைவில் இருந்ததனால்என் நினைவும் மறந்ததடா..
கண்களை மூடினேன் கனவு வந்தது...அட கனவு தானே என்றிருந்தேன்..கண்ணெதிரே நீயும் வந்தாய்...
கண்ணெதிரே வந்தவனைகையணைக்க நான் துடிக்ககனவே தான் என்று சொல்லிகண்முன்னே மறைந்ததேனோ?
உனதுயிரில் எனதுயிரும்ஒன்றெனவே கலந்ததுபோல்எனை நீங்கிப் பிரியாமல்என்னோடே இருப்பாயா?
உன்னிடம் ஒன்று கேட்பேன்மறைக்காமல் சொல்வாயா??உனக்குள் தொலைந்த என்னைஉயிராய் நீ காப்பாயா??

காதல்..... காதல்..... காதல்.....!!


காதல் என்றாய் கன்னம் சிவந்தேன்..கண்ணிமைகள் படபடக்ககதவோரம் சென்று மறைந்தேன்..!!
கதவருகே வந்து நின்றுகை விரலால் எனைத் தீண்டகண்மூடி ஒரு கணமேஉன் கைகளுக்குள் நான் புகுந்தேன்..!!
கைகளுக்குள் புகுந்த என்னைகாதலால் நீ தழுவ கணநேரத்தில் சுதாரித்தே நான்கலவரமாய் விலகி நின்றேன்..!!
ஏனென்று நீ கேட்க வெட்கத்தில் நான் பூக்க..கற்பனையில் விரிந்ததுவே நம் அற்புதமான காதல் வாழ்க்கை..!!

எனக்காய்ப் பிறந்தவனே.......!!


எனக்காய்ப் பிறந்தவனே..ஏன் இத்தனை ஊடல் என்னிடம்...!!நான் வடித்த வரிகளிலே...நீ இருக்கும் இடம் அறிவாயே..நீ இருக்கும் என் மனதினைநானுனக்குச் சொல்லவும் வேண்டுமோ?சொல்லத்தான் வந்தேன் நான்.. எனை நீஅள்ளித்தான் சூடிக்கொண்டாய்..சொல்லியும் உனக்குப் புரியவில்லையா..இல்லைநான் சொன்னது தான் புரியவில்லையா?உன்னிரண்டு கை தழுவக் காத்திருக்கும்.. என்னிலையை.. உன்னிடம் சொல்கின்றேன்..உதவிக்கு வருவாயா?வண்டாடும் சோலையிலே மலர்ச் செண்டாக நானிருக்ககொண்டாட வந்தவனே... எனைத் திண்டாடும் படி ஏன் செய்தாய்?

ஈரைந்து மாதம்கருப்பையில் வாழ் முழுதும்உன் மனதில்...அறியா வயதில்தெரியாமல் செய்த பிழைவாலிப வயதில்தெரிந்து செய்த தவறுஇரண்டும் பொறுத்தாய்...பள்ளி செல்லும் வயதில்உனை வீட்டு நீங்கியதில்லை..இன்று உனை கண்டே ஆகியதுமாதங்கள் பல..உனை நினைக்க ஒரு தினம்தேவை இல்லை - மறந்தால்தானே நினைக்க !!!

காதல் பரிசு


என்னில் பாதியாய்வாழ்வின்மீதியாய் கலந்தாய்..என் வெற்றியில் நீமகிழ்ந்தாய் - தோல்வியில்உற்சாகமூட்டினாய்.
கண்ணசைவில் சித்திரங்கள்படைத்தாய் - வாழ்வைவசந்த கால சோலையாக்கினாய்...
என் சுகமே உன்விருப்பம் என்றாக்கிக்கொண்டாய்..கோபங்களையும் சிரிப்பால்புன்னைகை ஆக்கினாய்..உன் பாதியாய் அல்லமுழுதுமாய் நானானாய் ...என்ன பரிசு தர நான் - எனைமுழுதும் அளித்தாலும் அது தகுமோ ??

பிரிந்தது ஏனோ ?


அலைபேசியின் அழைப்பில் உன் குரலை எதிர்பார்த்து ஏமாந்தேன் ..பேருந்து நிறுத்ததிலே உன் இரு கண்களை தேடி விழிகள் பூத்தது ...தினமும் நீ வரும் வழிபார்த்து காத்திருந்தேன் கரைந்தது நேரம்தான் ...கடற்கரையில் அலைகள் மட்டும் வந்து மோதவெற்று மனிதனாய் நான். ..அன்னையாய் எனைஅரவணைத்துகலக்கங்கள் தீர்த்தாயே ..கோபத்தில் நான் கத்த தென்றலாய் சாந்தப்படுத்தினாய் ..சோகத்தில் இன்று நான் எங்கே சென்றாய் நீ ??

எல்லாம் சரிதான்...


கிழித்தெறியமாட்டாய்என்கிற நம்பிக்கையில்தான்மனு ஒன்று சமர்ப்பித்தேன்.சொல்லாமலே கிழித்தது ஏன் ?மௌனம்போல ஒரு சுமை இல்லை.நம் கைகள் இறுக்கிய நிமிடம்தான்மௌனம் என நினைத்தது தப்பானது.இன்று...இன்றைய உன் மௌனம் ?உன்னை எழுத நினைக்கிறேன்என் கவிதையில்கூடநிறைய எழுத்துப் பிழைகள் !!!

காதல் கிசுகிசு...


மழையில் நனைகிறாய்.அட ...நான் குடையாய்ப் பிறந்திருக்கவில்லையேபரவாயில்லை வாஎன் முந்தானைக் குடைக்குள் !என்னைச் சரியாக்கஉன்னால் மட்டுமே முடிகிறது. பார்...என்னைத் துவைத்துமனக் கொடியில் காயவிட்டிருக்கிறாய்கசங்காமலே !என் கவிதைகளைக் கண்ணில் ஒற்றி எடுத்துஎதையாவது வந்துசொல்லிக்கொண்டேயிருக்கிறாய்.சீ...போடா வெட்கமாயிருக்கிறது.உன் சின்னச் சின்னசில்மிஷங்களயெல்லாம் சேமிக்கிறேன்.பிற்காலத்திற்கு உதவுமே என்று !உன்னைப் பிடிக்கவில்லைவேணாம் போ என்றுசொல்லிச் சொல்லியேஉன் நினைவுக் கயிற்றிலேயேதொங்கித் தொடங்குகிறதுஎன் பயணம் !இப்போ எல்லாம்காற்றுக்கும் காவல் கிடக்கிறேன்.எனக்காக நீ தந்துவிட்டகெஞ்சல் கொஞ்சல்களையெல்லாம்அபகரித்துக்கொள்கிறது அது !நீ காற்றில் உளறியஒவ்வொரு சொற்களையும்சிடுக்கு எடுத்து வைத்திருக்கிறேன்.நீ திரும்பி வரும்வரைஎன்ன செய்வது நான் !

தூங்க விடு கொஞ்சம்...


அன்புச் சுனாமியில்அரவணைப்புச் சுழிக்குள்இடறி விழுந்துநொறுங்கிப் போனதுஎன் பிடிவாதங்கள்.ஆறுதல் வார்த்தைகளில்அடிமையாய்ப் போனதுஎன் இதயம்.எழுப்பி எழுப்பிஅலுத்துப்போனதுஎனது ஆயுள்.இன்பமும் துன்பமும்சிறைப்பட்டுப் போனதுஉன் நினைவுகளுக்குள்.உன் நினைவால் நிறைந்துமேகத்தை மூடும் முகிலாய்மூடிக்கிடக்கிறதுஎன் அன்றாட அலுவல்கள்.இதயத் துடிப்போடுகூடியிருப்பதால்மூட மறுக்கிறது விழிகள்.உன் ஞாபகத் தூசுகளைதுடைத்துத் துடைத்தேதேய்ந்து போனதுஎன் மூளைக் குவளை.அன்பே காது கொடுசொல்கிறேன் ஒன்றுகேட்பாயா கொஞ்சம்.உன்னால் முடியுமா !எனக்குள் உன் நினைவுகளைநீயே முடக்கிப் போடு.இன்றாவது உனை மறந்து நான்நின்மதியாய்கண் துயில !!!

காதலுக்கு விலையில்லை...


முத்திரை இல்லைமுதலில்.முகவரி இல்லை !முன்னுரை இல்லை !முன்பின் தெரியவில்லை !என்...கைக்குக் கிடைத்தகடிதம் மட்டும்புலம்புகிறதுகாதல் தோல்வியென்று !!!

நே[கா]ற்று முத்தம்...


என் கண்ணுக்குள் நீயாய்நெஞ்சுக்குள் நிறைவாய்.இன்னும் இன்னும்கன்னம் இனிக்கநீ...காற்றலையில் தந்தஉன் முதல் முத்தத்தைபெற்றவளாய் ரசித்தபடி.இப்போ என்னை இறக்கச்சொல்மாட்டேன் என்று மறுக்காமல்உன் காலடியில்.ஒரே ஒரு சிடுக்கு மட்டும்மனசோடுஒதுங்கிய கிளிஞ்சல்களாய்உன்னையும்உன் நினைவுகளையும்சேர்த்துச் சேர்த்துநிறைத்து வைத்திருக்கிறேன்மனக் கிடங்குகள் எங்கும்.பக்குவமாய்யாரிடம் கொடுத்துச் செல்லநான் !!!முத்த மயக்கத்தோடு

பிரிவு...


பிரிவின் புதைகுழிக்குள்புதையுண்டு போயிருக்கிறாயாபிரிவின் வதையைஅனுபவித்திருக்கிறாயா எப்போதாவது !என்ன நடந்ததாகஎன்னை விட்டுப் பிரிந்தாய்என்ன சாதிக்கிறாய்வானுயர சிறகடிக்கசிறகு தந்து சேர்ந்து பறந்தநீ.....ஏன் பாதை மாறினாய்பிரிவின் வழி சுகமானதா !மரண தண்டனைக்குள்தள்ளப்பட்ட எனக்காய் வாதாடிவிடுதலை தருவாய்எனப் பார்த்திருக்கமீண்டும்சோகச் சிலுவைக்குள் அறைந்தவனேஎன் கல்லறைக் கற்கள்கூடகண்ணீர் சுரக்கும்உன் பெயர் கேட்டால் !எனக்கும் தெரியாமல்என்னைத் திருடிவிட்டுஎன் விருப்பம் தெரிவிக்கஒன்றுமே தெரியாதவனாய் மறுத்ததுபடமாய் விரிகிறது மனக்கண்ணில் !ம்ம்ம்.....இனி நான் தரவும்நீ மறுக்கவும் என்ன மிஞ்சியிருக்கிறது.புரையோடிய மனதையாவதுதிருப்பித் தந்துவிடு !கட்டிய கோட்டைகளை நீயே சுக்கு நூறாக்கு.நீ வளர்த்த பூக்களுக்கு நீயே புயலாகு.உன் அன்பால் கட்டுண்ட என்னைநீயே சுட்டுப் பொசுக்கு.செய் ...உன்னால் முடிந்த எல்லாமே செய் !பைத்தியக்காரனேயாருமே பிரிக்கமுடியாதுஎன்ற எங்களை பிய்த்தவன் நீ.இரத்த வரிகள் மட்டுமே இனி உன்னால்ஒவ்வொரு நிமிடத்திலும்.வருகின்ற கண்ணீர்த் துளிகளைச்சேகரித்து கவிதைகளாக்கிகாயமுன்எழுதப்பழகிக் கொள்கிறேன் !எத்தனையோ சோகங்களைசுட்ட பழம்போல ஊதித் தின்றுசெரிக்கப் பழகிக்கொண்ட என்னால்நீ தந்துவிட்டுப் போன சோகத்தைஏனோ பழக மறுக்கிறேன் !இப்போ என்னால் முடிந்ததெல்லாம்இரவுப்பாயில் புரண்டுகொண்டுஇதயத்து நினைவுகளை உதறிஉன் நினைவுகளை மட்டும்தனியாகப் பொறுக்கிஇறுகிய உன் இதயத்தில்எங்காவது ஓர் இடமிருந்தால்பொறுக்கிய சிறுதுண்டுஒன்றையாவதுபொருத்தலாமா என்று யோசித்தபடி !!!

வெட்கம்...


என் வீட்டு மலர்கள்வாடியதைப் பார்த்தேஎன் அந்த மூன்று நாட்களைக்கணக்கெடுக்கிறாயே !கள்வனடா நீ.நடசத்திரங்கள் தூங்குவதற்கும்நான் முற்றத்தில்நிலாக் காய்வதற்கும்சம்பந்தப்படுத்துகிறாய்சதிகாரா!உன்னோடு பேசிப்பேசியேசில பறவைகளின் பாஷைகூடபரிட்சயமாகிறது.தூவானத் திரை முகம் மறைக்ககலைந்த பொட்டைச் சரிசெய்தபடிதொங்கியபெட்டைக் குருவியின் குசுகுசுப்பைரசிக்கிறது மனம்.கவிதையாய்உன் பேச்சும்உன் காதல் குறிப்புக்களும்எனக்குள் நீபுதைந்த பொழுதுகள்உறைந்த நொடிகளின் மயக்கம்இப்போதும்...எங்கிருந்தோ ஒட்டிக்கொள்ளதென்றல் கிச்சுக் கிச்சு மூட்டகூசவைக்கிறது வெட்கம்.பேசுவதும்கேட்பதும்கெஞ்சுவதும்மறுப்பதும்விலகுவதும்அணைப்பதுமாய்எம் நெகிழ்வான விளையாடல்கனவோடுநீ நடத்தியபுலவியின் பொழுதுகளைவெளியில் சொல்லியேபாடுகிறது அந்தப் பேடு.அச்சச்சோவெனமனம் அலறஅன்றைய பொழுதைவெட்கத்தோடு தலையணைக்குள்ஒளிக்க மறைக்கமுயல்கிறதுஎன் மன அரங்கம் !!!

வெளிநாட்டில் வாழ்பவன்

முகம் மறந்து போன
மகனும்
மகளும்
அலுவலக மேஜையின் மீது
சிரித்துக் கொண்டிருக்க
ஒரு வருடம் கடன்
ஒரு வருடம் வீடு
ஒரு வருடம் தங்கையின் திருமணம்
ஒரு வருடம் அப்பாவின் பை பாஸ்
ஒரு வருடம் பிள்ளைகளுக்கு
வாழ்வியல் சந்தர்ப்பங்கள்
விடுமுறைகளை தள்ளிப்போட
உழைத்துக் கொண்டே இருக்கிறேன்
கண் கானா தூரத்தில் இருந்து
கிடைக்கும் சந்தர்ப்பங்களில்
அலைபேசிகளில்
வழியும் ஏக்கங்கள்
என் தாகத்தை சுலபமாக
தீர்க்கும் பாட்டில்கள்
உன் ஏக்கத்தை எப்படி தீர்த்து கொள்கிறாய்
என் பிரியமானவளே?
கண்கள் சந்தித்தபோதுகருவிழிகள் நின்றது வார்த்தைகள் சந்தித்தபோது மௌனம் நின்றது மனங்கள் சந்தித்தபோதுமதங்கள் நின்றது இதயங்கள் சந்தித்தபோது இன்னல் நின்றது திருமணம் சந்தித்தபோது இதயமும் நின்றது----------------------------------------தென்றலென தீண்டியவிழி சுழலின்ஆழிக் காற்றிலேசிறகில்லாமல்பறந்த போது தான் தெரிந்ததுநீஓர் புயலென

உன் நினைவுகள்..


தோற்றாலென்னவெற்றிப் புன்னகையோடு உன்நினைவுகள்....

கல்லூரியில் அவளை முதலில் பார்த்த போது....


மானே என்றேன்..மானங்கெட்டவனே என்றாள் -மனம் தளரவில்லை.

கண்ணே என்றேன்..போடா கழுதை என்றாள் -நான் கலங்கவில்லை.

நீயின்றி நானில்லை என்றேன்..இல்லாமல் போகப்போகிறாய் என்றாள் -அவளை விட்டு நகரவில்லை.

என் உலகமே நீதான் என்றேன்..உன்னை உதைக்கப் போகிறேன் என்றாள் -அவளை உதறவில்லை

அழகாய் இருக்கிறாய் என்றேன்..அடி வாங்கப் போகிறாய் என்றாள் -அவளை அலட்சியப் படுத்தவில்லை

என் அகிலமும் நீ தான் என்றேன்சற்றும் யோசிக்காமல்அண்ணா ...என்றாள்பேசாமல் திரும்பி வந்துவிட்டேன்....

என்னில் நீ


வனமெங்கும் பூக்களின் வாசமாய்வானம்போல் பரந்து விசாலமாய்மனமுழுவதும் நிரம்பிவழிகிறாய்நினைவுகளின் உதிரமாய்சலசலக்கும் நீராய்நீந்திவரும் தென்றலாய்நிதர்சனமாய் நிலைத்துவிட்டாய்உள்ளத்துக்குள் உயிராய்..

மரணிக்கும்போது


உனக்காகவே நானென்றுஎன்னை நீ உச்சிமுகர்ந்தாய் அத்தருணமே என்மனம் சாந்தி அடையக்கண்டேன்நான் பிறக்க நீ வரம்கேட்டாய் என்னை மணக்க வரம்கேட்டாய் நமதன்பின் வெளிப்பாடாய் நம்வாரிசுகளின் வரம்கேட்டாய்எத்தடையுமின்றி எல்லாமே கிடைத்தனஎன்னவனே!எனக்கு வரமாக கிடைத்தவனே!எனக்காக ஒருவரம் இறைவனிடம்கேட்பாயா?என்விழிநீர் உன்னைத்தழுவ உன் மார்புக்குழிக்குள் நான்முகம் புதைத்திருக்கும் வேளையில்எனக்கான மரணம் நிகழவேண்டுமென்று...

என்சுவாசம்-உன்வசம்


எனதுயிரே,,உன் சுவாசம் வெளியேறியபோது- அதைஎன் மூச்சுக்காற்றுக்குள் உள்வாங்கிக்கொண்டேன்,”வேண்டுமெனில்”உன் சுவாசத்தை நுகர்ந்துபார்!!!நான்விடும் மூச்சுக்காற்றில்உன்வாசம் கலந்திருக்கும்.
என் சுவாசக்குழாயினுள்உன்சுவாசத்தை சிறைவைத்துக்கொண்டேன்,”ஏனெனில்”வெளிசுவாசம் உள்நுழைகையிலும்-என்உள்சுவாசம் வெளியேருகையிலும்என்நொடியும் என்சுவாசம்

அன்பே உன் நினைவை!


நெஞ்சமெங்கும் நினைவலைகள்நிலவில் உதித்தமஞ்சப்பூக்களாய் பூத்திடவே-உன்மடியில் கிடந்தேனேமடிசாய்ந்து முகம்பார்த்தேன்-என்மனதுக்குள் மஞ்சம்கொண்ட உன் நினைவுகள் மரகத வீணை மீட்டிடவே!அன்பைச்சொரிந்து அனுதினமும்அலைபாய விடுகின்றாய்அந்திவானம் சிவப்பதுபோல்அதரம் சிவக்க வைக்கின்றாய்குளிர்கால இரவுகளில்கோடைவெப்பம் உன்னாலேவெயில்கால தருணங்களில்குளிரடிக்குது தன்னாலேநினைவுகளின் தாக்கத்தால்நித்தம் நித்தம் வேகின்றேன்-என்உணர்வுகள் மரித்தபின்னும்உன்நினைவோடு நானிருக்கஒவ்வொரு மணித்துளியும்ஓராயிரம் ஒளிக்கதிராய்நிலையாக நிலைத்திருக்கஒவ்வொரு நொடியும் உருகி உருகி வேண்டுகிறேன்.......

ஏக்கம் நனைக்கும் நினைவுகள் !!!


கடல் கரையாய் என் ஏக்கங்கள்
காய்கின்ற நேரத்தில் எல்லாம்
காதல் அலையாய்
உன் நினைவுகள் என்னை
நனைக்கத்தான் செய்கின்றன ..


எத்தனை முறைதான்
ஏமாற்றும் இந்த அலைகள்
உன்னைப்போல் ...
எத்தனை முறைதான்
ஏமாறும் இந்த கரைகள்
என்னைப்போல் ...


என்னை ஏமாற்றுவதில்
உனக்கு
மகிழ்ச்சி என்றால் .!
உன்னிடம் மீண்டும் மீண்டும்
ஏமாறுவதிலும் எனக்கு
மகிழ்ச்சியே !


இதயத்தின் கரை
எதுவரை என்று தெரியவில்லை .,
ஆனால்
உன் நினைவுகள் மட்டும்
ஒரு தொடர் கதையாக ..............................

நீ இன்றி ஓர் இரவு !!!


சிறைப்பட்டு போவதும் சில நேரங்களில்
சந்தோசம்தான் ....
புரிந்தது உன் பார்வை
தீண்டிய நேரத்திலெல்லாம் ..
உன் மன இருந்தாலும்
அதிலும் ஒரு கட்டற்ற சுதந்திரம்..
எப்படி இது சாத்தியம் ??
தெரிந்தால் எனக்கும் சொல்லிக்கொடு .

நேற்றிரவு ...
உன் வார்த்தைகள் தீண்டாத செவிகள்
இன்றும் ஏனோ ஊனமாய்..
என்றும் இல்லாத நிசப்தம்
அதிலும் ஓங்கி ஒலித்தபடி
வெகு நேரமாய் உன் நினைவுகள் ..
அனைத்தும் இருந்தும் ஏதோ ஒன்றை இழந்ததுபோல் ...
பொம்மையை தவறவிட்ட குழந்தைபோல்....
வேறெதுவும் தோன்றாது கணணியை
வெறித்து நோக்கியபடி நெடுநேரமாய் நான்...

படுக்கைக்கு சென்று பல மணித்துளிகள்
கடத்து போனாலும் கூட
தூக்கம் என்னவோ தூரமாய்....
கடிகார முள் அசையும் ஓசைகூட
நேற்றுமட்டும் நரகாசமாய்....


எஞ்சிய நினைவுகள் !!!


மீண்டும் மீண்டும் தோற்றுப்போகிறேன்
என்று தெரிந்தும் முயற்சிக்கிறேன் .
எஞ்சிய நினைவுகள் தீர்ந்துபோகுமோ
என்ற நடுக்கத்தில் !.


நீ எப்பொழுதோ வீசி சென்ற
புன்னகையில் சிக்கிக்கொண்டவனாய்
இன்றும் உன் அனுமதி பெறாத
கைதியாய் உன் இதயத்தில் நான் !...

உன்னுடன் நான் மணிக்கணக்கில் பேசினாலும்
முற்றுப்பெறாத வானமாய் என் மனம்!!
பிரியும்போது ஒருநிமிடம் மௌனம்,,,,
உன் ஆழப்பெருமூச்சு,,,,,

அட !
இப்போது என் வானம்
முற்று பெற்றுவிட்டது விட்டது.
ஆம் என்னவளே ,,,
மணித்துளிகள் பல கரைத்தும்
புரியவைக்க முடியாத உன் மனதை
அந்த ஒருநிமிட மௌனத்தால்
அழகாக புரிய வைத்துவிட்டாய்!!


தீராத கவிதைத் தாகம் !!!


ஆயிரம் கவிதைகள் கிறுக்கியும்
தீராத கவிதைத் தாகம்
உன் பெயரை எழுதிய
மறுநொடி தீர்ந்துபோனது .!
உன்னைப் பற்றி நான் எழுதிய
அந்த கவிதைதான்
என்னை கவிஞனாக்கியது .!


உன் முகம் பார்த்து
நான் வரைந்த அந்த ஓரப்புன்னகைதான்
என்னை ஓவியனாக்கியது .!

உன் சிற்றிடை பார்த்து
நான் செதுக்கிய அந்த சிலைதான்
என்னை சிற்பியாக்கியது .!


ஆனால்
இன்று உணர்ச்சிகள் உயிரிழந்த
இந்த இதயத்தில் எஞ்சியது
உன் நினைவுகள் மட்டுமே .!


அவள் நினைவுகளின் மிச்சங்கள் !!!

தீர்ந்து போன
நினைவுகளின் மிச்சங்களில்
எல்லாம் இன்னும்
அவளை பற்றிய கனவுகளே
தீராமல் தினம் தினம் என் நினைவுகளில் !
அவசர வாழ்க்கையினூடே
எப்பொழுதோ தொலைந்துப்போன
புன்னகையின் அழுகுரல்
எங்கேனும் செவியெட்டித்
தொலைக்கின்றன !
பேருந்துகளின் ஜன்னலோர பயணங்களிலோ ,
முடிய மறுக்கும் நகரத்து தெருக்களிலோ
வேகமாக கடந்து முற்றுச்சந்தின் இறுதியில்
மறைந்துபோகும்
இளவயதுப்பெண்ணொருத்தி
அவளை ஞாபகப்படுத்திச்செல்கிறாள்.!
அழைப்பேசியின்
எதிர்பாராத அழைப்புகள் .,
முடிய மறுக்கும்
நீண்டதொரு தொலைபேசி
உரையாடல்கள் .,
உறவுகளின்
அன்பு விசாரிப்புகள் என
ஏதாவதொன்று
மீண்டும் அவளின் நினைவுகளை
என் இதயத்தில் தள்ளி
தாழிட்டு செல்கின்றது.!
ஒருவேளை
நான் இறந்து போகும்போது
அவளை
மறந்துபோகலாம் !!!சிறகு தொலைத்த பட்டாம் பூச்சி !!!தோற்றுப் போகிறாய்
என்று
தெரிந்தும் மீண்டும்
முயற்சிக்கிறாய் என் இதயத்தில்
இடம் பிடிக்க
ஆனால்
நானோ மீண்டும்
ஒரு ரோஜா
இந்த
வலியின் கனலில்
உயிர் இழக்க விரும்பாதவளாய் .!
பட்டாம் பூச்சியாய்
பறந்து திரிந்தேன் அவனுடன்
ஆனால் இன்று
சிறகுகள் தொலைத்தவனாய் அவன்
சிறகுகள் இருந்தும் பறக்க மறந்தவளாய்
அவன் நினைவுகள் மட்டும்
சுமந்தபடி நான்...!
நீ
புரிந்துக்கொள்வாய் என்று
நினைக்கிறேன்...
மீண்டும் உன் இதயத்தை
தெரிந்தே தொலைக்காமல்.....!

காதலித்துப்பார் வலிகள் ஒன்றும் புதிது இல்லை !!!


வெற்று கிண்ணமாய் இருந்த
என் வாழ்வை நிறைத்து கொள்ளவென
நீயாய் வந்தாய்
ஒரு நொடிதான் ..
மறுநொடியே கனவானது அந்த

அழகிய நிஜம் ...
கணப்பொழுதே
மலரில் உட்கார்ந்து போகும்
வண்ணத்துப்பூச்சிபோல நீ வந்து போனாலும்
உன் தடங்களை சற்றே ஆழப்பதித்து
சென்றுவிட்டாய் ,,,,,
அதனால்தான் வலிக்கிறது இன்னும்....
ஆனாலும்
வலிகள் ஒன்றும்
புதிது இல்லையே எனக்கு,,,,
இன்றைய நட்புக்கும் ,காதலுக்கும்
ஒரு நூலிடையே வித்தியாசம்
நட்பில் காமம் கலக்கும் போது
காதலாகிவிடுகிறது
காமம் கலக்கும் காதல்
வலியை மட்டுமே பரிசாக்கி விட்டுப்போகிறது .!.
கண்கள் இரண்டும் பேசும் போது
உதடுகள் இரண்டும் மௌனமாகிவிட்டன
இதயங்கள் இரண்டும் பேசும்போது
உலகமே மௌனமாகிவிட்டது
இதயத்தின் ஓசை தவிர வேறெதுவும்
அந்த நான்கு காதுகளிற்கும்
கேட்டவில்லை .!

நம் மௌனம்

ஒரு பஞ்சுப்பொதியின் மென்மை போல்நம்மிடையே ஆன மௌனம் நம் கண்களிலிருந்து வார்த்தைகள் ஒருசிறகுபந்தைப் போல்மாறி மாறி பறக்கின்றன நீ சிலசமயம் உன் இமைகளால் அவற்றைச்சிறைபடுத்தி என்னை தோல்வியுறச் செய்கிறாய் என் முகம் நோக்கி வரும் சிலவற்றைநானும் கண்ணில் ஏந்த விழைகிறேன் ஆனால் அவை என் உதடு கிள்ளிஉன்னிடமே திரும்பச் சேர்கின்றன அவற்றை கவனமாய் உள்ளங்கையில் சேகரித்துநீ உன் கண்ணில் ஒற்றிக்கொள்கிறாய் நம் மௌனம் பற்றி எரிகிறது

நானும் நீயும்

அன்பே!நானும் நீயும் மட்டுமே உள்ள ,அதிசயமாய் நமக்கு வாய்த்த ,விடுமுறை நாளை கழிக்கப் போகிறோம் வா !வானில் பகலவன் தோன்றும் முன் தளராது எழுந்து கடற்கரை நோக்கி விரைநடை போட்டு உதிக்கும் சூரியனை அலைகள் கால்கள் தழுவ வரவேற்று மகிழ்வோம்இளமையான பின் காலைப் பொழுதில் நமக்கு மிகப்பிடித்த வயலின் இசை பின்னணியில் முழங்க நமக்கு நாம் தேர்ந்தெடுத்த சிறு உணவு உண்போம் .பொடிநடை நடந்து நம் வயல் ஒட்டிய ஆற்றினூடே பாடிக்கொண்டே நீரில் திளைப்போம் . பின் நீ காய் நறுக்க நான் சோறு வைக்க அன்பை கலந்து அங்கே சமைக்கும் நேரம் கொஞ்சம் கவிதையும் வாசித்து பார்ப்போம்உனக்கு பிடித்த வரிகளை நீ சிலாகித்து எனக்கு புரியாத வரிகளை புரியவைத்து கவிதை நம்முள் அசைய அதை உற்று நோக்கி பரவசம் கொள்வோம்எனக்கு மிகப்பிடித்த பின் மதியப் பொழுதில் நம் வீட்டு வாசலில் காற்று நம்மை தழுவி அணைக்க ஏதும் பேசாமல் கைப்பற்றி மௌனம் சுவைப்போம் அப்படியே என்ன் மடி சாய்ந்து உறங்கி விடுவாய் நீ.குழந்தைபோல் உறங்கும் உன் தலை கோதி உன் முகம் ரசித்து புன்னகைப்பேன் நான் .கண் திறக்கும் நீ என்னவென்று கேட்க ,ஏதுமில்லை என நான் தலையாட்ட பொன்னால் ஆக்கப்பட்ட கணங்கள் அல்லவா அவை ?ஞாயிறு மறையத் தொடங்கியதும் நாம் திரும்ப நடக்கத் தொடங்குவோம் .உலகமே வியக்கும் நம் கோயில் சிற்பங்களின் நுணுக்கம் வியந்து சேர்ந்து ரசிப்போம்சோழரும் பாண்டியரும் சேரனுமான தமிழக வரலாற்றை சொல்லிக்கொண்டே வருவாய் நீ .அதில் திளைத்து, ஆண்டுகள் ஆயிரம் கடந்த வாயிலில் சிலிர்த்து நிற்ப்போம் நாம் .எப்பொழுதும் எனக்கு தர எத்தனை விஷயங்கள் உன்னிடம் உள்ளன!அந்த இளஞ்சூடான கருங்கல்லில் அமர்ந்து இலக்கியம் ,சித்தாந்தம்,காதல்,மனவியல் என சகலமும் கதைப்போம் நாம்நிலவு வானில் நடக்கும் நேரம் ;இரண்டு வெள்ளரிக்காய்களை வாங்கி சுவைத்துக்கொண்டே நிலவொளியில் கடலைக் காணச்செல்வோம் .எத்தனை பருகினாலும் தீராத தாகத்தோடு நிலவையும் கடலையும் உண்டு தீர்த்து மனதில்லாமல் வீடு ஏகுவோம்.மொட்டை மாடியில் தண்ணீர் தெளித்து அந்த குளுகுளுக்கும் காற்றில் நிலவொளியில் நம் மனம் கவர்ந்த கீதம் இசைக்க புன்னைகையோடு உறங்கச்செல்வோம் .எப்போதோ வாய்க்கும் இந்த நாளில் உன்னை விட்டு சிறிதும் விலகக்கூடாதென கைப்பற்றியே உறங்கி விடுவேன் நான்உறங்காமல் நிலவொளியில் என்னையே பார்த்திருந்ததாக மறுநாள் சொல்வாய் நீ

நானாகத் திரிவேன்

நான் விரைவில் நானற்று போவேன் போகும் முன்னேயாவது நம் சந்திப்பை எனக்கு பரிசளிப்பாயா ? உன் கண்ணிலிருந்து புறப்படும் ஒளிக்கீற்று என் கழுத்தை சுவாசித்து அக்கணத்தை நிறுத்த செய்யட்டும் ,நான் நானற்று போகும் நேரம் உன் ஒற்றை விரல் தீண்டலின் ஸ்பரிசம் மட்டும் என் கண்ணுக்குள் அடைந்து சிறை படட்டும் நீ எனக்கு தர நினைக்கும் சின்ன முத்தம் ஒரு சிவப்பு அரளியாய் என் மீது வாசம் வீசட்டும் சிறு நகக்கீறலில் எழும் குருதி காலை நனைத்து வழித்தடமாய் ஆகட்டும் என் கருவம் ஆளுமை சிந்தனை செயல் எல்லாம் நீ புகுந்து நான் நீயாக மாறட்டும் உன்னை என்னிலே கொண்டு நானாகத் திரிவேன் நான்

யூத்புல் விகடனின் காதலர் தின ஸ்பெஷலில் வந்த படைப்பு

"என்னிலும் சிறந்த துணையை அடைந்தால் அன்பே... நீ என்னை மறப்பாய்"... "என்னிலும் தாழ்ந்த துணையை அடைந்தால் அன்பே... நீ என்னை நினைப்பாய்"... காதலையும், வாழ்க்கையையும், மனித உள்ளங்களையும், அதன் தேடுதலையும், ஆசாபாசங்களையும் முழுமையாக உணர்ந்த ஒரு மனிதனின் யதார்த்த கவிதை இது.ஆனால் வாழ்க்கை பிடிபடாத காலத்தில், காதல் தான் பிரதானம் என்று நினைத்து வாழ்ந்த காலத்தில்... காதலுக்கு இந்த கவிதை அவமானம் செய்வதாய் தோன்றியது. மேலும் இந்த கவிதை சிறுபிள்ளைத்தனமாகவும், முட்டாள்தனமாகவும் பட்டது. காதல் என்பது இவ்வளவு தானா என்ன. காதல் எவ்வளவு உயர்வானது. மனைவிக்காக காதலை மறக்க முடியுமா? கவிதையா இது... பிதற்றல் என்றே தோன்றியது. ஆனால் அதே தான் இன்று எனக்கும் கவிதையாக வந்துள்ளது. இப்படி "உன்னிலும் சிறந்த துணையை அடைந்தால்- உன்னை மறக்கக்கூடும்... உன்னிலும் தாழ்ந்த துணையை அடைந்தால்- உன்னை நினைக்கக் கூடும்". உலகிலே எல்லாமே நீர்த்து போக கூடியவையே. விதிவிலக்காகுமா...காதல் மட்டும். மனித வாழ்வின் பெரும்பாலான அம்சங்கள் சுயநலத்தின் அடிப்படையில் தான் வருபவை... உற்று நோக்கின் காதல் கூட அப்படித்தான் என்று கருதுகிறேன்.
காதலும், காதலியும் எனக்கு சில பாடங்கள் கற்று கொடுத்துள்ளன. மனிதன் மானமிழந்தே வாழும்போது காதலியை இழந்தா வாழ முடியாது. என் காதலியாய் உன்னை பார்த்த போது இருந்த முகம்+மனம்... இப்போது வேறு ஒருவரின் மனைவியாக பார்க்கும் போது முற்றிலும் வேறு விதமாக... நீ இல்லாத வாழ்க்கையை நினைத்து கூட பார்க்க முடியாது என்று நீயும் சொன்னாய்... நானும் சொன்னேன்... ஆனால் பாரேன். அது நடந்ததா, இல்லையே... ஆனாலும் வாழ்கிறோம். பேசியாக வேண்டுமே என்பதற்காக எதையாவது பேசுகிறார்களோ காதலர்கள். அப்படி தான் இருக்க வேண்டும். நீ போன பின்னால் எல்லாமே என்னை விட்டு போய் விடவில்லை. அப்படியே தான் பொழுது புலருகிறது. அம்மா காபி கொடுக்கிறாள். வேலைக்கு போகிறேன். இடை இடையே உன் ஞாபகம் வருகிறது. ஏதோ ஒரு வெற்றிடம் மட்டும். அம்மாவிடம் பேசும் போது அந்த வெற்றிடம் மறைவதாக தோன்றுகிறது. இன்று "நீயில்லாத வாழ்க்கையை வாழ கற்று கொண்டு தேறி இருப்பதாக" தோன்றுகிறது. அப்படியெனில் காதல்... காதல் என்றால் என்ன என்பதை முழுமையாக புரிந்து கொண்டேன், ஒரு போதும் காதலில் தோற்றுவிட்டதாக யாரும் சொல்லக்கூடாது. காதல் என்ன தேர்வா... வெற்றியா, தோல்வியா என்று பார்ப்பதற்கு. நீ எனக்கு கிடைப்பாய் அல்லது கிடைக்காமல் போவாய். வாழ்க்கை சாய்ஸ்கள் நிறைந்தது. இதுவா... அதுவா... வேறு எதுவா...இப்படி தான் எதையாவது நினைத்து எனக்கு வாழ்வதற்குண்டான ஆசையை ஏற்படுத்துகிறேன் இலக்கியங்கள் அல்லது சினிமாக்கள் காட்டும் காதல் வேறு, நிஜ வாழ்க்கை காதல் வேறு. அடி விழ அடி விழ, நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் புலப்படுகின்றன. "எழுதுங்கள் இவன் கல்லறையில்- அவள் இரக்கமில்லாதவன்" என்று... "பாடுங்கள் இவன் கல்லறையில்- இவன் பைத்தியக்காரன் என்று" என்றெல்லாம் பாடிக் கொண்டு இருக்க முடியுமா? போய் விட்டாய். அடுத்து என்ன செய்வது. பெற்றோர்களை காரணம் காட்டியே நிறைய காதலை துவம்சம் செய்கிறோர்கள்... காதலர்கள். நீயும் அதையே செய்தாய். நல்லது. ஆனால் உண்மை வேறு தானே. ஏதோ ஒன்று, என்னை விட்டு உன்னை விலகும்படி தூண்டியது என்பதை நான் அறிவேன். காதலர்களுக்குள் கூட இனம் புரியாத வெறுப்பு வருவது ஆச்சர்யம் தான்.காதல் கூட நாளாக, நாளாக சலித்து தான் போகிறது.ஆனால் அதை மறைக்க ஆயிரம் காரணங்கள், ஆயிரம் பொய்கள். முன்னுக்கு பின்னாக பேசுவது, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வீசுவது. என்ன செய்வது. பிறருக்கு வலிக்காமல் வாழ நமக்கு தெரியாதே. புரிந்து கொண்டு நானாக விலகினால் எனக்கது கௌரவம். இல்லையென்றால்... ஏதேனும் சட்டச்சிக்கல்கள்... ஈவ்டீசிங் கள்... வம்பு தும்புகள். வேண்டாமே யாருக்காகவும் யாரும் காயப்பட வேண்டாமே. ஏன் காயப்பட வேண்டும். யாரையும் யாரும் கெட்டியாக பிடித்து கொள்ளவில்லையே. யார் இல்லாமலும் யாராலும் வாழ முடியும் என்பது தானே நிதர்சனம். உன் பாதை உனக்கு, என் பாதை எனக்கு. சிறந்த துணை உனக்கு அமையப் பெற்று இருக்கக்கூடும். வாழ்த்துக்கள். வாழ்க்கையில் எல்லாமே மாயை. இருப்பது போல் இருக்கும். ஆனால் இருக்காது. நீ எனக்கு கிடைப்பது போல் இருந்தது. ஆனால் கிடைக்கவில்லை. நான் என் மனசை தேற்றிக் கொள்கிறேன். அது மிக நல்லது. சந்தோஷம் வந்தால் ஏற்று கொள்ளும் மனம், துக்கம் வந்தால் அதையும் ஏற்று கொள்ள தெரிய வேண்டும்.உலகின் முதல் இழப்பு என்னுடையதல்ல. கடைசி இழப்பாகவும் என்னுடையது இருக்க போவதில்லை. பிறகேன் வருந்த வேண்டும். எல்லோருக்கும் நேருவதே எனக்கும் நேர்ந்துள்ளது. மகிழ்ச்சி... நேற்று உன்னை ஷாப்பிங் மாலில் பார்த்தேன். நீயும் என்னை பார்த்தாய். படக்கென்று முகத்தை திருப்பி கொண்டாய். சேலையை இழுத்து போர்த்திக் கொண்டாய். பிறகு என் பக்கமே நீ திரும்பவில்லை என்பதை நான் அறிவேன். என்னால் உனக்கென்ன தீங்கு விளையும் என்று நினைத்தாய். நீ தான் சொன்னாய், ஒரு முறை, "சூது, வாது இல்லாம்ம இருக்கீங்க... எப்படி தான் பொழைக்க ப்போறிங்களோ தெரியல" என்று,நீ என்னை பார்த்து நட்புடன் சிரிக்க வேண்டாம். எதிரியை பார்ப்பது போல் பார்த்து இருக்க வேண்டாமே... கேவலமாய் பார்த்து இருக்க வேண்டாமே, என்ன செய்வது. கேவலம்- நாம் மனிதர்கள் தானே.

விகடனில் வெளியான கவிதை – சொடுக்கி படியுங்கள்

வெளுத்த வானம் சுமக்கும் மௌனம்பசி கொண்ட மிருகமாய் வறட்சிநம்பிக்கை நூலில் சிக்குண்டுநகரும் நாட்களோடு விவசாயி...இடைவிடாத அடைமழைவற்றிப்போன வாடிக்கையாளன் வருகைதிறந்து போடப்பட்ட வர்ணச் சட்டிக்குள்கெட்டித்துப்போன தூரிகையாய் விலைமகள்...காற்றில் வரும் சாம்பார் வாசம்களித்துச் சிரிக்கிறது விழித்த பசிமீந்து போன உணவுகளோடு விழும்எச்சில் இலைக்காக பிச்சைக்காரன்...

உருகுதே..

பல்லாயிரம் பட்டாம்பூச்சிபறந்து வந்து என்னை அள்ளிச்அணைத்து மிதக்கச் செய்கிறதுநீ அலைபேசியில் மின்னும் போதுநரம்புகளில் சில சொட்டுமது ஊடுருவுகிறது நடு நிசியில்சிணுங்கும் குறுந்தகவலில்உன் பெயர் சிரிக்கும் போதுஎட்டிப் பறித்த எருக்கம் பூவின்இதழ் பிரித்து உறிஞ்சியெடுக்கும்ஒரு துளி தேனாய் சுவைக்கிறதுநீ வார்த்தைகளாய் மின்மடலில் வரும் போதுஇறக்கி வைத்த இட்லியில்கசிந்து வரும் ஆவியாய்மிதந்து கரைகிறது மனம்நீ என் பெயர் அழைக்கும் போதுபூந்தோட்டம் கடக்கும் போதுகோடிப் பூக்களின் வாசனைகனத்துக் கலந்து நாசி நிரடுகிறதுஉன் பெயரெழுதிய பேனாவை முகரும் போது

மௌனமாய்த் தேடுகிறேன்


இன்னும் எத்தனை விடியல்தான்
கசங்காத அடர்த்தியான போர்வைக்குள்
முயல் குட்டியாய் சுருண்டு எனக்கானவெப்பத்தை நானே தேடுவேன்போர்வை விலகிய வலது பாதத்தின்சுண்டு விரல் வழி நுழைந்த குளிர்எலும்புக்குள்ளும் நரம்புக்குள்ளும்இன்னும் கூடுதல் இம்சையாய்நீ கையோடு எடுத்துச் சென்று விட்டஉன் சதைகளில் கசியும் வெப்பத்திற்குகைகளை நீட்டி நடுங்கும் உடலோடு,உதறும் மனதோடு வாடுகிறேன்மண்டிக்கிடக்கும் புதர்களைத் தாண்டிஉன் கைகள் நீளமுடியாத தொலைவில்தன்னந்தனியாய் வாடுகிறேன் வாசமும்வண்ணமும் உணரப்படாத மலராய்துளியும் குறையாமல் காய்ந்து கனக்கிறதுஅள்ளியெடுக்க நீ இல்லாமல்பருவத்தில் எனக்குள் வெடித்துச்சிதறிமனதில் மலையாய் குவிந்த காதல் நீ தேட மறந்த நாளன்று எனக்குள்நானே தொலைந்துபோனேன்ஆனாலும் மௌனமாய்த் தேடுகிறேன்அடையாளம் சிதைந்த என்னை....

வலிக்கும் நியதி

வலி
பறித்த சிவப்பு ரோஜாவின்
காம்பில் ஈரமாய்க் கிடக்கிறது
இரத்தம் நிறமிழந்து
உறவு
அடிமாட்டுக்கு லாரி ஏறிய
மடிவற்றின மாட்டின் தலக்கயிறு
கனவில் இறுக்குகிறது கழுத்தை
நியதி
பூ மட்டுமா உதிர்கிறது
தேடிவரும் தேனீயின்
நம்பிக்கையும் தானே
முகம்
எத்தனை திருத்தியும்
ஏனோ நிறைவில்லை
சகிக்காத கண்ணாடியின் சாபம்

ஒரு தீ பூக்குதே

ஒரு தீ பூக்குதே

கதவோரம் வீசிய செய்தித்தாளாய்
தூக்கம் வடிந்து பூவாய் மலர்ந்து
வேலை இயந்திர வாசிப்பில் வதங்கி
பூசிய பவுடர் கலைந்து கரைந்து
பசி கொஞ்சும் களைத்த முகத்தோடு
உண்ட சோம்பலில் கொஞ்சம் அமிழ்ந்து
உதித்த வியர்வைத்துளி உறைந்து
சூடிய மல்லிகையாய் சற்றே வாடி
மெலிதாய் கண் சொருகி சோம்பலாய்
மதிய உணவுக்குப் பின் சோர்ந்து
மஞ்சள் வெயிலில் மினுமினுத்து
சன்னலோர பயணத்தில் தூங்கி வழிந்து
என்னதான் பொழுது புரட்டிப்போட்டும்
புரளாமல் தளராமல் பூத்துக்குலுங்கி
கடக்கையில் கசியும் காதலில்
எல்லாச் சோர்வையும் எரிக்க
புதிதாய் ஒரு தீ பூக்குதே!

abdulkuthoos