திங்கள், 7 ஜூன், 2010

வறுமையின் பிடியில் மீண்டும் ஒரு காதல் !!!


உன்
திறந்த இதயத்தில் உந்தன் அனுமதி இன்றி
என் காதலை பூட்டியவள் நான்தான் .
உன் நினைவுகளின் வெப்பத்தில்
குளிர் காய்கிறேன் என்று
நடுக்கத்துடன் சொன்னவளும் நான்தான் .

நீ
பார்க்கும்போது உன் விழிகளுக்கு காட்சிகளாய்
நான் இருப்பேன் என்றேன் .
நீ பேசும்பொழுது உனது வாக்கியத்திற்கு வார்த்தைகள்
நான் தொடுப்பேன் என்றேன் .
உன் நிஜவிரல் பிடிக்கும் வரை
தினம் உன் நினைவுகளின் விரல் பிடித்து
நடப்பேன் என்றேன்.
இரவினில் உன் இமைகள் மூட மறுக்கும்
நேரத்தில் எல்லாம் என் நினைவுகள்
உன்னை தாலாட்டும் என்றேன் .
நமது திருமணத்தில் வானம் இசை அமைக்க
இடிகள் இசைக்கருவிகளாகும் என்று
சொன்னவளும் நான்தான்,
மேகங்கள் அட்சதை தூவ
நட்சத்திரங்கள் மலர்களாகும் என்று
சொன்னவளும் நான்தான் ,

நம் காதல் பொய்த்தால் கடல் நீர் வற்றிப்போகும் ,
மழைத்துளி அமிலமாகும் ,
ஒற்றைத் தீக்குச்சியில்
இந்த உடல் உனக்குமுன்
உடன் கட்டை ஏறும் என்று
சொன்னவளும் நான்தான் .
நம்மை பிரிக்க நேர்ந்தால் இருவரையும் ஒன்றாய்
சிக்கன சிலுவையில்
அறைந்துக் கொல்லட்டும் என்றேன் .
உன்னை பிரிந்து சுவாசிக்க மாட்டேன்.
ஒருவேளை பிரிய நேர்ந்தால்
இந்த சுவாசமே வேண்டாம் என்றேன்
இவை அனைத்தையும் உச்சரித்த
இதே உதடுகளால்தான்
இன்று உன் இதயத்தை தொலைக்கப் போகும்
இந்த வார்த்தை ஈட்டிகளையும் வீசுகிறது .

என் வீட்டில் அடுப்பெரிக்க
இன்று நாம் காதல் விறகாகிப்போனது .
என்னை மன்னிக்கவேண்டாம்
என்னை மறந்து விடுங்கள் !
உன்னை நேசித்தது நிஜம் !
தினம் உன் நினைவுகளிலே
சுவாசித்தது நிஜம் !
காதலில் இணைவது போன்ற
கதைகள் கேட்ட நான்
ஏனோ பிரிவது போன்ற கதைகள்
கேட்க மறந்துவிட்டேன்

காதல் செய்வதற்க்கு நாம் இருவர் போதும் என்றேன்
இன்றுதான் அது இந்தியக் காதலில்
கண் மூடி சொல்லும் பொய் என்று உணர்ந்தேன் .
காதலுக்கு கட்டுத்தரிக்கூட கிடையாது
ஆனால்
கல்யாணத்திற்கு கட்டுத்தரி மட்டும் அல்ல
கடிவாளமும் சேர்ந்து வந்துவிடுகிறது .
பறப்பதற்கு கற்றுத் தந்தாய் என் காதலா .
என் சிறகுகளில் கடிவாளம்
இறுக்கப்பட்டு இருப்பதை யார் அறிவாரோ !

குழந்தைகளின் பசியைவிட
சாராயதின் ருசியை அதிகம் அறிந்த
என் தந்தை !
ரேசன் கடையில் தந்த சேலையின்
இளமை தொலைந்தும் இன்னும்
கிழிந்த போத்தலை தைத்து
மானம் காக்க போராடும் என் தாய் !
தான் பூப்பெய்த செய்திகூட தெரியாது
ஆவேசமாய் அடுப்பூதும் என் தங்கை!
ஓசியில் பக்கத்து வீட்டில் கருப்பு வெள்ளைப்படம்
பார்த்த கனவுகளை என் வீட்டிலும்
நிஜமாக்கத் துடிக்கும் என் தம்பி !
இத்தனை பேருக்கும் மொத்தமாய் மாதம்,
மாதம் செயற்கை சுவாசம் கொடுக்கும்
ஆக்சிஜன் குடுவையாய் நான் மட்டும்.

இத்தனை கடிவாளங்களின் ஒரு முனை என் கழுத்திலும்
மறுமுனை அவர்களின் கழுத்திலும்
சுருக்குக் கயிராய் பிணைக்கப்பட்டுள்ளது .
எப்படி ஓடிவருவேன் காதலா ?
இத்தனை உயிர்களை கொன்ற
கொலைகாரி என்றப் பட்டத்துடன்
உன் மனைவியாக !
உன்னை காதலித்து ஏமாற்றியவளாக
இருந்துவிட்டுப் போகிறேன் இந்த
ஜென்மத்தில் மட்டும் மன்னித்துவிடுங்கள்,
உங்கள் நினைவுகளை
மறக்க முடியாத இவளை மறந்துவிடுங்கள்........

எஸ்.எம்.எஸ்.கலாட்டா


1) புன்சிரிப்பை விட கண்ணீர் உண்மையானது....ஏனெனில் எவர் முன்பும் சிரித்துவிட முடியும்!ஆனால் உங்களுக்கு ஸ்பெசலானவரின் முன்பு மட்டுமே உங்களால் அழ முடியும்!!

2) 21-ம் நூற்றாண்டு LKG மாணவன்:டீச்சர்! என்னப் பத்தி என்ன நினைக்குறீங்க?டீச்சர்: வெரி ஸ்வீட் பாய்!LKG மாணவன்: மச்சான்! சொன்னேன்ல.. அவ எனக்கு ரூட் விடுராட!!

அப்பா தன் 5 வயது மகனிடம்: ஏன்டா அழற? நானும் உன்னோட பிரெண்ட் மாதிரிதான்... சொல்லு!மகன்: அது ஒன்னும் இல்ல மச்சி! இன்னும் கொஞ்சம் ஹார்லிக்ஸ் கேட்டதுக்கு உன் ஆளு என்ன அடிச்சுட்டா!

ஏன் பொண்ணுங்க அழகா இருக்காங்க?உண்மையாகவா அல்லது மேக்கப்பினாலா? ????????பையன்களுக்கு நல்ல இமேஜிநேசன்ஸ் இருப்பதால்!

6) கண்டக்டர்: பஸ்சுக்குள்ள வாப்பா! அதான் கடல் மாதிரி இடம் இருக்கே!ஸ்டுடன்ட்: எனக்கு நீச்சல் தெரியாது! அதான் கரையிலேயே இருக்கேன்!

7) அய்யாச்சாமி: "I am going" ன்னா என்னடா அர்த்தம்?நண்பன்: நான் போறேன்!அய்யாச்சாமி: ஹே! ப்ளீஸ்.... மீனிங் சொல்லிட்டு போடா!

8) ப்ரொபசர்: படிக்குற பிள்ளைங்க ஒரு நாளைக்கு 7 மணி நேரம் தூங்கினா போதும்!ஸ்டுடன்ட்: அது எப்படி சார் முடியும்? ஒரு நாளைக்கு 5 மணி நேரம்தானே காலேஜ்!

9) அதிர்ச்சியான தகவல், எல்லா செய்தி சேனல்களையும் பாருங்க!ஒரு இறந்த பெண்ணின் உடலை நிலவில் நாசா கண்டுப்பிடித்துருக்கிறது... பல நூற்றாண்டுக்கு முந்தைய உடலாம் அது! எல்லோரும் குழப்பத்தில் உள்ளனர்! அது யாராக இருக்கும்? ???????அது வேற யாரும் இல்ல! நிலாவில் வடை சுட்டுட்டு இருந்த பாட்டியின் உடலாம் அது!எனக்கு ரொம்ப மூட் அவுட்! வடை போச்சே!

10) ஒருத்தர் கோவிலுக்கு சென்று தன் செருப்பை கழட்டி விடும் இடத்தில் "செருப்பை திருட நினைக்க வேண்டாம் -- பாக்சிங் சாம்பியன் " என்று நோட்டீஸ் வைத்து விட்டு உள்ளே சென்றார்!சாமி கும்பிட்டு விட்டு வெளியே வந்து தன் செருப்பை வைத்த இடத்தில் உள்ள பதில் நோட்டீசைப் பார்த்துஅதிர்ச்சி அடைந்தார். அது என்னவெனில் "என்னைப் பிடிக்க முயல வேண்டாம் -- அதெலடிக் சாம்பியன்".

11) பித்யானந்தாவின் வழக்கறிஞர் வண்டு முருகன்: நான் சுத்தி வளச்சு பேச விரும்பல! ..... பலா நிதி மாரனப் பார்த்து கேக்குறேன்! பன் டி.வீ நடத்துறியா? இல்ல F டி.வீ நடத்துறியா? என்னய்யா தப்பு பண்ணுனான் என் கட்சிக்காரன்? எதோ ஒரு ஆசையிலபஞ்சிதாவ ரூமுக்கு தள்ளிட்டுப் போயிருக்கான்!.... சரின்னு விட வேண்டியதுதானே!...அத விட்டுட்டு கேமராவுல ஷூட் பண்ணி இருக்க!.... அத நீ மட்டும் போட்டுப் பாக்க வேண்டியதுதானே!.... அதான்யா உலக வழக்கம்!...அத விட்டுட்டு ஊருக்கே போட்டு காட்டிருக்க நீ!..... போட்டு காட்ட அது என்ன குடும்ப படமா?.........நீதிபதி: மிஸ்டர் வண்டு முருகன்! கோர்ட்ல இப்படி ஆவேசப் படக் கூடாது!வண்டு முருகன்: கடுப்பேத்துறாங்க மை லார்ட்!!

எஸ்.எம்.எஸ்.கலாட்டா


1) லெக்சுரர்: சன் பஸ்ட் வருமா? இல்ல மூன் பஸ்ட் வருமா?ஸ்டுடன்ட்: கண்டிப்பா மூன் தான் பஸ்ட் வரும் சார்!லெக்சுரர்: எப்படி சொல்ற? ஸ்டுடன்ட்: ஆமாம் சார்.. ஹனி மூன் வந்த பிறகுதான் சன் வரும் சார்!!

2) நம்ம அய்யாச்சாமி சின்சியர் டிராபிக் போலீஸ் தான்! இருந்தாலும் அவரை சஸ்பென்ட் செய்து விட்டார்கள்...ஏன்?பின்ன... ஓவர் ஸ்பீட்ன்னு சொல்லி ஆம்புலன்ஸ்'ஐ நிறுத்தி பைன் போட்டா சஸ்பென்ட் செய்ய மாட்டார்களா?

3) காலேஜ் கேர்ள்: டாடி! நான் காலேஜ் போயிட்டு வரேன்!அப்பா: என்னம்மா ஸ்கூல் போயிட்டு இருந்தப்பல்லாம் "அப்பா"ன்னு கூப்பிடுவா! இப்படாடின்னு கூப்பிடுற?காலேஜ் கேர்ள்:அய்யோ! "அப்பா"ன்னு கூப்பிட்டா லிப்ஸ்டிக் அழிஞ்சிடும்!

4) உன் வாழ்க்கை இருட்டா இருந்தால் கடவுளிடம் பிரார்த்தனை செய்!அப்படியும் இருட்டா இருந்தா........சான்சே இல்ல! கரண்ட் பில்லை கட்டனும்'மா! ..........

5) சிங்கத்த போட்டோல பார்த்துருப்ப!TV'ல பார்த்துருப்ப! ஏன் கார்டூன்ல கூட பார்த்துருப்ப!ஆனா தனியா நின்னு இப்படி மெசேஜ் அனுப்பி பார்த்துருக்கியா?...இப்ப பாத்துக்க!.............

6) இடி மின்னல்புயல்மழைவெள்ளம்பூகம்பம்எது நடந்தாலும்ஈஸ்ட்வெஸ்ட்நார்த்சவுத்எங்க இருந்தாலும்ஏர்டெல்பீ எஸ் என் எல் ஏர்செல் வோடாபோன்வெர்ஜின் ரிலையன்ஸ் எந்த சிம் போட்டு இருந்தாலும்காலைமதியம்மாலைஇரவுஎந்நேரம் ஆனாலும்நோக்கியாமோடோரோலாசாம்சங் சோனிஎல் ஜி எந்த மொபைல் வச்சுருந்தாலும் சென்னை கோவைமதுரைசேலம்நெல்லைதிருச்சிஇந்தியாவில்எந்த மூலையில் இருந்தாலும்என்னோட எஸ் எம் எஸ்சும்மா கில்லி மாதிரிவந்து சொல்லும்"இன்னைக்காவது பல்லை வெளக்கிட்டு சாப்பிடு"ன்னு!!

7) உலகத்தில் உள்ள 60% பசங்களுக்கு லவர் இருக்கு!
30% பசங்களுக்கு கேர்ள் பிரண்ட் இருக்கு!!
மீதி இருக்கும் 10% பசங்களுக்கு அறிவு இருக்கு!!!

8) ஹைக்கூ:-

நான் உதட்டோடு உதடாககொடுத்தஒரே முத்தத்தில்கர்ப்பம் ஆனது"பலூன்"!எப்பூடி?!?

9) நம்மைஅதிகமாகசிரிக்க வைப்பதும்அதிகமாகஅழ வைப்பதும்நாம்அதிகமாகநேசிக்கும்ஒருவர் மட்டும்தான்!

10) வாழ்க்கைஒருபட்டம் பூச்சி மாதிரி!லேசா பிடிச்சாபறந்திடும்!இறுக்கிப் பிடிச்சாஇறந்திடும்!அதனால் வாழ்க்கையில் கவனமா இருங்க!...

11) உங்க வாழ்க்கையில் வெற்றி பெறநீங்க இரண்டு விஷயங்களை தவிர்க்கணும்!முதலாவது "மற்றவர்களோடு உங்களை ஒப்பிடுவதை"! இரண்டாவது "மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை"!!

12) வாழ்க்கை சில சமயங்களில் உங்களை எதிர்பாராத திருப்பங்களில் அழைத்து செல்லும்!அப்படி பயணம் செய்ய பயப்பட வேண்டாம்! என்றாவது ஒருநாள் அது தொட முடியாத உயரங்களில் உங்களை உட்கார வைக்கலாம்!!