செவ்வாய், 8 ஜூன், 2010

உன் ஐந்தாவது காதலன்.ZZZZZZZ


அன்பு XXXXX

கடந்த ஆறு மாத காலமாக என்னை(யும்) லவ்வுனதுக்கு மிக்க நன்றி. நீ இந்த கடிதத்தை படித்துக் கொண்டிருக்கும் இந் நேர‌த்தில், உனக்கு புதிய இ.வா.காதலன் கிடைத்திருப்பான் என நம்புகிறேன். அப்படி இன்னும் கிடைக்கவில்லையெனில் கிடைப்பதற்காக அந்த எல்லாம் வல்ல கடலையாண்டவரை வேண்டுகின்றேன். சரி, விஷயத்துக்கு வர்றேன்.நிற்க, ( கடிதமெழுதுன இதெல்லாம் போடனும்)உன்னை மறப்பதற்காக, அந்த வலியை குறைப்பதற்காக மட்டும் நான் அடுத்த தெருவில் ஒருத்தியை இப்போது லவ்வுகிறேன். ஆமாம், இது உனக்கு தெரிஞ்சு (மட்டும்) இது என்னோட நாலாவது காதல்தான். முந்தைய காதல்களில் நிறைய கற்றுக் கொண்டதால், இப்போ என்னால ரொம்ப ஈஸியாவே லவ்வ முடியுது.காதல் வந்தாதான் கவிதை எழுத வரும்ன்னு உனக்கு தெரியும். ஆனா, இப்போ எனக்கு கவிதை எழுதறதுக்கு போரடிக்கிது. நாலு (ள்)ஆகிப் போச்சுல.அதனாலதான் உனக்கு கடிதம் எழுதுறேன். அதே மாதிரி, இப்பல்லாம் கவிதை எழுதுறது அவ்ளோ ஈஸி இல்ல. எல்லாரும் களத்தில இறங்கிட்டாய்ங்கே. அவனவன் பிரிச்சு மேய்ஞ்சுட்ருக்காங்கே. சரி, அவனுக கவிதையெல்லாம் காப்பியடிச்சு என் ஃபிகர்கிட்ட கொடுத்துராலாம்னு பார்த்தா, இப்போல்லாம் Blogஅ எல்லாரும் கவனிக்க ஆரம்பிச்சுட்டாங்கலாம்ல. அப்பறம் அவ என்னைய "கப் ஐஸ்" அடிச்சுருவா..! அதனால, நாம லவ்வும்போது நான் உன்னை வச்சு எழுதுன கவிதையெல்லாத்தையும் (?) எனக்கு திருப்பி அனுப்பி விட்டா நல்லாருக்கும். நான் வேற அத ஜெராக்ஸ் எடுத்து வைக்க மறந்துட்டேன். அப்டியே நான் அவளோட பேரை மட்டும் மாத்தி எழுதி குடுத்துருவேன். தயவு செஞ்சு குடுத்துட்டா,உனக்கு புண்ணியமாப் போகும் தங்கச்சி.

அப்பறம் இன்னோரு மேட்டரு, உன்கிட்ட என்னோட ஒரு அழகான (?) ஃபோட்டோ ஒன்னு இருக்குல்ல, அதையும் லெட்டர்ஸோட சேர்த்து அனுப்பி வச்சா, நல்லாருக்கும். துரதிருஷ்டவசமா,அது நான் மொத மொதல்ல லவ்வ ஆரம்பிக்கிம்போது எடுத்ததுனால ,அந்த ஃபோட்டோவுல மட்டும்தான் நான் அழகா இருப்பேன்.அடுத்து என்னன்னா, நம்ம லவ்வுன இந்த ஆறு மாசத்துல நான் உனக்கு ஏகப்பட்ட காசு செலவழிச்சுருக்கேன். அது எவ்வளவு எனன் விவர்ம்ன்றத இங்க சொல்லிருக்கேன். அந்த காசையெல்லாம் கூடிய சீக்கிரம் திருப்பி கொடுத்திட்டன்னா, நான் என்னோட புது லவ்வருக்கு செலவழிக்க உதவும். கொஞ்சம் கீழ படிச்சு பாரேன்...

மதியம் மற்றும் இரவு உணவு சாப்பிட்ட வகையில் ரூ 895/-* கூல் ட்ரிங்க்ஸ் குடித்த‌ வகையில் ரூ2938/-* ஸ்நாகஸ் (வகையறக்கள்) தின்ற வகையில் ரூ5645/-* ஜூஸ் குடித்த‌ வகையில் ரூ3845/-* சினிமாவுக்கு கூட்டிட்டு போன வகையில் ரூ1235/-* நெட் சாட்டிங் வகையில் ரூ1499/-* மொபைல் ரீசார்ஜ் செய்து குடுத்த வகையில் ரூ2546/-* பெட்ரோல் செலவு வகையில் ரூ4255/-* கிஃப்ட் வாங்கித் தந்த வகையில் ரூ7850/-

மொத்தம் 30,708 ரூபாய் ( முப்பதாயிரத்து எழு நூற்றியெட்டு ரூபாய் மட்டுமே..!) செக் ஏற்றுக் கொள்ளப்பட மாட்ட்து. ரொக்கமாக கொடுக்கவும்.

மேல சொன்ன அமௌன்ட, கூடிய சீக்கிரம் செட்டில் பண்ணீரு.அப்பறம் நான் உனக்கு குடுத்த கிஃப்ட்ஸ் எதாவது நீ வச்சுருந்தன்னா, அத நான் பாதி விலைக்கு வாங்கிக்கிறதுக்கும் தயாரா இருக்கேன்.நான் ஒன்னும் அந்தளவுக்கு, இரக்கமில்லாதவன் இல்ல. அதனால் நீ எனக்கு எழுதுன லவ்லெட்டர்ஸ் எல்லாத்தையும் (சுமார் 3 கிலோ எடையுள்ள‌) இதோட சேர்த்து அனுப்பி வச்சுருக்கேன்.பெற்றுக் கொள்ளவும். மேலும் நீ எனக்காக எதுவும் செலவு செய்திருந்தால், திருப்பி வாங்கிக் கொள்ளவும். ஆனால், நீதான் என் கூட வரும்போது மாட்டும் பர்ஸ மறந்து வச்சுட்டு வந்துருவியே. அப்பறம் எப்பிடி செலவாகியிருக்கும்..? மட்டும் விளக்கம் கொடுக்கவும்.

எது எப்பிடியோ,YYYYYY உடனான உனது தற்போதைய ஆறாவது காதலென கேள்விப்பட்டேன். அந்த காதல்(லாவது) சுபத்தில் முடியட்டுமென, எல்லாம் வல்ல அந்த கடலையாண்டவரை வேண்டுகின்றேன். நன்றி. மேல சொன்ன அமௌன்ட,கூடிய சீக்கிரம் செட்டில் பண்ணவும்.

இப்படிக்கு,

உன் ஐந்தாவது காதலன்.ZZZZZZZ

மனதினில் என் மனதினில்மனதினில் என் மனதினில் உந்தன் முகம் வந்து ஏனோ ஏனோ என்னை கொல்கிறது..
காதலும் நீயேன வாழ்வும் நீயென வாழ்க்கையை தொலைத்தேன்வாலிப வயதினிலே... உறவுகள் இருந்தும் என் உயிர் நீயேன உயில் எழுதி தரவா உயிர் ஓவியமே உறங்கா உன் நினைவுகள் உறக்கத்திலும் உளரலாய்காற்றினில் கலக்குதடா
காதல் வலி தந்தவனே..
என் கண்ணை பாரடா என் இதயத்தின் வலிகள் இரு விழிகளிலும் தெரியுமடா இதயத்தில் பூவாய் மலர்ந்தவனே.. ஏனடா என் இதயத்தை புயலடித்த தேசமாய் மாற்றினாய்..
காதலில் என்னோடு சேர்ந்து வாழ்ந்தவனே.. கண்ணீரையும் கனவுகளையும்
காதல் பரிசாக தந்து விட்டு போனாயேயடா காதல் வலி தந்தவனே.. காதல் என்னைவிட்டு பிரியவில்லை நீமட்டும் ஏனடா என் காதலை விட்டு பிரிந்தாய்.. என் காதலும் எங்கே என் கவிதையும் எங்கே சொல்லிவிட்டு போ இல்லை என்னை கொன்று விட்டு போ..

மறுபடியும் எழுவேன்


உன்னிடத்தில் கொண்ட காதல் - சொல்ல
உலகத்தில் மொழி இல்லை எனக்குஉன்னிடத்தில் சொல்ல – அதனைஉண்மையில் தைரியம் இல்லை – அதனால் என்னை நான் வருத்திக் கொண்டு எனக்குள் அதை புதைத்துக் கொண்டேன்எனக்குள்ளே புதைத்த காதல் என்னை இங்கு வாட்டுதம்மா…..!
தனிமையில் இருந்த என்னை தயவுடனே எடுத்து அனைத்து - இன்று வெருமைக்குள் தள்ளி விட்டாயாவெறுக்கிறேன் என்னை நானே நீ தந்த அன்பு – அது என்றும்நிழல் போல எந்தன்னுடன்நியமாக சொல்லுகின்றேன்நீ நன்றே வாழ்ந்திட வேண்டும் மரணத்தின் வேதனை தனைமறுபடியும் உணரவைத்தாய் - எனினும்மறுபடியும் எழுவேன் என்று மனதினில் உறுதி கொண்டேன்…..

என்னிலிருந்து உன்னைத்தவிர…!ரோஜாவையெல்லாம் கூந்த‌லில்தான்சூடிக்கொள்கிறாய்.முட்க‌ளை மட்டும் ஏன‌டி ம‌ன‌தில்ரோஜாவையெல்லாம் கூந்த‌லில்தான்சூடிக்கொள்கிறாய்.முட்க‌ளை மட்டும் ஏன‌டி ம‌ன‌தில்உன் கரம் மட்டும் அறிந்த என் நெஞ்சத்தைஉன் நெஞ்சம் கொண்டு பழுது பார்க்க வா ....என் ஆயுள் முழுவதும்
உன் அங்கம் மட்டும் பணி செய்ய வா .... என் விரல் கொண்டுஉன் உடல் திண்டிக் கொள்ள வா ....உன் உதட்டு வரிகளில்என் உதடுகளால் எழுதிக் கொள்ள வா ....உன் விரல்களால்என் தலை முடிகளை தரம் பார்க்க வா ....உன் வெட்க்கத்தை என்னில் ஊற்றி..என் வீரத்தை பிடுங்கிக் கொள்ள வா ....என்னில் உன்னை…உன்னில் என்னை அடைத்துக் கொள்ள வா ....என் சுவாசப் பைகளில்உன் வாசத்தை மட்டும் நிரப்ப வா ....உன் இடையினை என் கரங்களால்கட்டிப் போட வா ....உன் தீண்டல்களில்என் தோல்களை தூய்மைப்படுத்த வா ....உன் சிரம் தாழ்த்தி சினுங்க வைக்க வா ....உன் இடை சுற்றஎன் கரம் வேண்டும் வா ....அன்பே உன்னைமுடிந்தவரை முத்தமிட்டுக்கொள்ள வா ....உன் கனவுப் பொய்களைஎன்னில் மட்டும் நிஜமாக்க வா ....
எதை வேண்டுமானலும் எடுத்துக் கொள்ள வா ..... ஆனால்?
என்னிலிருந்து
உன்னைத்தவிர…!

பிடிக்கவில்லை


பிடிக்கவில்லைஎனக்கு...இந்த அரசியலும்அதன் விஷ வேஷமும்...!பிடிக்கவில்லைஎனக்கு...இந்த நகரமும்அங்கே தூசிக் காற்றும்...!பிடிக்கவில்லைஎனக்கு...இந்த பணப் பேய்களும்மக்கிய மனித நேயமும்...!பிடிக்கவில்லைஎனக்கு...இந்த உழைக்காத வர்க்கமும்அதன் உழைப்புச் சுரண்டலும்...!பிடிக்கவில்லைஎனக்கு..நான் வாங்கிய பட்டமும்..அதன் மேல் சிலந்திக் கூடும்...!பிடிக்கவில்லைஎனக்கு...இந்த தியேட்டர் கூட்டமும்வீணாகும் முயற்சியும்...!பிடிக்கவில்லைஎனக்கு...பாழும் வறுமையும்..நொறுங்கிய மனங்களும்...!பிடிக்கவில்லைஎனக்கு...இந்த காதலும்அதன் சதைக் கவர்ச்சியும்...!பாதம் வருடிகெஞ்சுகிறேன் அம்மா...மீண்டும்தாயேன் -உன்கருப்பையில் இடம்...!!!
உனக்கு மட்டும்எப்படி வருகிறது "கவிதை"என்கிறாள் என் தோழி.அவளுக்கு தெரியாது;நான் அழுவதை தவிர்க்கஎன் பேனா அழுகிறதென்று!!..
வெயில் அதிகாமனவுடன் வீதியை பார்த்தேன் நீ வந்து கொண்டிருந்தாய் ....வெயிலையே பிரகாசபடுத்தியவள் நீ ....... !

நீ குளிக்கும் தண்ணீர் எல்லாம் நரகத்திற்கு சென்றது குடிக்கும் தண்ணீர் சொர்கத்திற்கு சென்றது ....!


நீ ஆடைகள் உடுத்துவதில்லை ஆடைகள் உன்னை கட்டிக்கொள்கின்றன ....!மழை உன்னை தொட வந்தது ....குடை உன்னை காத்து காதலை வெளிப்படுத்தியது ...!உனக்கு இத்தனை காதலர்களா .................நீ யாரை காதலிக்கிறாய்?????
என் தோட்டத்துக்கு ஒரு தடவை வந்து செல் அந்த ரோஜா நினைத்து கொண்டு இருக்கிறது ,உலகில் தான்தான் அழகானது என்று
என்ன அதிசயம் என் தோட்ட பூக்கள் எல்லாம் வாடமலே இருக்கின்றன .நீ வந்து சூடிகொள்ளும் வரை அப்பிடியே இருக்க போகின்றதாம்

மாலை நேரங்களில்நீ ஒரு தடவை எல்லா பூ செடிகளையும்பார்த்தால் போதுமாம் தண்ணீர் தேவையில்லையாம்அவற்றுக்கு,நான் கூடஉன்னை பார்த்துதான் எனக்குள் உற்சாகம்ஏற்றி கொள்கிறேன்.


ஆனாலும் ஒற்றை பூவைமட்டும் பறித்து சூடி கொண்டு போய் விடாதே.கண்ணர் விட்டு அழும்மற்றவை எல்லாம் .எதோ உன் கூந்தல் முடி ஏறுவதுதான் தங்கள் பிறப்பின் நோக்கமாம்
இந்த பூக்களிடம்தேன் குடிக்க பறந்து வரும் சிட்டு குருவி போல் உன்னிடம் காதல் குடிக்க போகிறேன்

நான் வாழனும்.. வாழ்வேன்.

ஹலோ எப்படி இருக்கீங்க?பார்த்து ரொம்ப நாள் ஆச்சி.. அப்புறம்.. வேலை எல்லாம் எப்படி போய்கிட்டு இருக்கு உங்களுக்கு? வீட்ல எல்லாம் நல்லா இருக்காங்களா? எல்லோரையும் விசாரிச்சதா சொல்லுங்க .. ஆமா.. இனிமே நான் விசாரிச்சத சொல்லி என்ன பண்ண போறீங்க.. எல்லோரும் நல்லா இருக்காங்கல்ல அது போதும்..ஏன் இப்படி பேசுறனா ? ஓ.. நான் இதுவரைக்கும் உங்க கிட்ட சொல்லல இல்ல.. நாளைக்கு நான் இருக்க மாட்டேன்.. இல்லங்க ஊருக்கெல்லாம் போகல.. உலகத்த விட்டே போக போறேன்.. ஆமா இன்னைக்கு ராத்திரி நான் தற்கொலை பண்ணிக்க போறேன்.ஏன்னு கேட்டா என்ன சொல்றது ? எனக்கு வாழ பிடிக்கல அவ்ளோ தான்..ச்சே ச்சே.. காதல் தோல்வி.. வேலை கிடைக்கல.. குடும்பத்துல கஷ்டம் இப்படி எந்த அற்பமான காரணமும் இல்லங்க..அப்புறம் ஏன் இந்த முடிவா? சரி வாங்க உக்கார்ந்து பேசுவோம்..என்னவோ தெரியலங்க.. கொஞ்ச நாளா.. மனசு ஒரு மாதிரியா இருக்கு.. யார் கூடவும் பேச பிடிக்கல.. தனியா இருக்குற மாதிரி ஒரு பீலிங்..நல்ல குடும்பம்.. தேவையான அளவுக்கு சம்பளம் வர வேலை, எதையும் பகிர்ந்துக்க நண்பர்கள், சந்தோசமான வாழ்கை ன்னு எல்லாம் இருந்தும் எதோ ஒரு வெற்றிடம் இருக்குற மாதிரி தோணுது மனசுல.. எனக்கும் சில சமயம் சில பேர பார்த்தா தோணுது.. இவன் எல்லாம் எந்த நம்பிக்கைல வாழுறான்? நாம ஏன் சாகனும்னு?ஆனா அப்புறம் ஒரு தனிமை கிடைக்கும் போது யோசிச்சி பார்த்தா சாகனும்னு தோணுதே..அட போன மாசம் கூட கடை தெருவுல ஒரு புதுசா கல்யாணம் ஆனா ஜோடிய பார்த்தேன்.. பொண்ணு சும்மா ரதி மாதிரி... ஸ்ஸ்ஸ்ஸ்........ என்னத்த சொல்ல... ஆனா அவ புருஷன்.. அந்த கொடுமைய ஏன் கேக்குறிங்க.. அப்போ கூட நினச்சேன்.. இந்த பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வச்சதுக்கு கல்லை கொண்டு அடிச்சி கொன்னுருக்கலாம்னு.. ஆனாலும் அந்த பொண்ணு அவன் கூட சகிச்சிகிட்டு வாழுது .. ஒருவேளை அவளுக்கு புடிச்ச குணம் அவன் கிட்ட இருக்குதோ என்னவோ.. இருந்தாலும் கடவுளோட காம்பினேஷன் செலெக்ஷன் கொடுமைய நினச்சி ரொம்ப கோபம் வந்துசிங்க.அது கூட பரவாஇல்ல போன வாரம் மார்க்கெட் போய் இருந்தேன்.. தக்காளி கிலோ எட்டு ரூபான்னு வித்துகிட்டு இருந்தவன் ஒரு வெளிமாநிலகாரண பார்த்ததும் kg 15 ருபீஸ்ன்னு இங்கிலிஷ்ல சொல்லி விக்குறான்.அப்போ கூட தோணிச்சி இப்படி ஊரை ஏமாத்தி பொழைக்கிற இவன் எல்லாம் வாழும் போது நான் ஏன் சாகனும்னு.. ஆனாலும் நான் சாக விருப்பபடுறேன்.இன்னைக்கு காலைல கூட நான் பாட்டுக்கு வண்டில போய்கிட்டு இருந்தேன்.. வழில ஒருத்தன் லிப்ட் கேட்டான் தெரிஞ்சவன்னு நம்பி கூட்டிகிட்டு போனேன்.. பயணம் செஞ்ச 5 நிமிஷத்துல ஒரு சோகக்கதைய சொல்லி 50 ரூபா கறந்துட்டான் . ஏமாந்தது என்னோட தப்பு தான் இருந்தாலும் ஏமாத்துறவன் எல்லாம் சந்தோசமா வாழுற உலகத்துல நான் ஏன் சாகனும்? ஆனாலும் தோணுதே...இந்த உலகத்துல மனுஷன்ல இருந்து அவன் உருவாக்குன கடவுள் வரைக்கும் யாரும் நல்லவங்க இல்லங்க. எல்லோரும் சுயநலத்தோட தான் மத்தவங்க கிட்ட பழகனும்னு நினைக்கிறாங்க.. அடுத்தவங்க கஷ்டத்துல இவங்களுக்கு ஒரு சந்தோசத்த எதிர்பார்த்து பழகுறாங்க ..ஆனா எவளோ பேர பார்த்தும் மனசு மாறாத நான் இப்போ மனச மாத்திக்கலாம்னு நினைக்கிறேன்இப்போ கூட பாருங்க உங்களுக்கு எவ்ளோவோ வேலை இருக்கும் ஆனாலும் நான் தற்கொலை பண்ணிக்க போறேன்னு தெரிஞ்சும் இவ்ளோ நேரம் வெட்டியா உக்கார்ந்து கதைகேட்டு மனசுக்குள்ள சந்தோஷபடுறிங்க பாருங்க. உங்கள மாதிரி ஜென்மம் எல்லாம் உயிரோட இருக்கும் போது நான் ஏன் சாகனும். நான் வாழனும்.. வாழ்வேன்.

மரண சிந்தனை!!!!


மனமே மனமே பாவம் செய்வதேன்மரணத்தை மறந்தே மமதைகொள்வதேன்மரணசிந்தனை நினைவில் வரலையா!இல்லைமரணமென்பதே உனக்கு இல்லையா!
பூமியில் இறைவன் படைத்த அனைத்துமேபுனிதமனிதனே உனக்காவே! -இங்குசிறிதுகாலம் நீ இளைப்பாறவே!-இதில்பொழுதுபோக்குகள் நிறைந்து கிடக்குதுபுண்ணியங்களும் குவிந்து இருக்குது
புண்ணிய வழியை புறந்தள்ளிவிட்டுபாவத்தின் பக்கம் மனது போவதேன்பாதை மாறியே பயணம் செய்வதேன்உலகவாழ்க்கையில் உன்னைத்தொலைத்ததேன்உண்மையை உதறி உள்ளம் அலைவதேன்
கூடிக்கூடியே கோள்சொல்கிறாய்குடும்பத்தைப்பிரிக்க புறஞ்சொல்கிறாய்கூத்து கும்மாளாம் தேடிப்போகிறாய்கூட்டுக்கொள்ளையில் பங்குகொள்கிறாய்
மண்ணிலும் பொன்னிலும் மயக்கங்கொள்கிறாய்மதுவிலும் மாதுவிலும் மனதைத்தொலைகிறாய்மதப்போர்வையில் தன்னை ஒளிந்துகொண்டுமனிதனைக்கொன்று மனிதம் கொல்கிறாய்
ஃபேஷன் ஃபேஷனென வேசமிடுகிறாய்பெருமைப்பேசியே பொழுதைக்கழிக்கிறாய்
வர தட்சனையை வாங்கிகொள்கிறாய் வறுமையுடையோரை வதைசெய்கிறாய்வட்டிக்கு வட்டி வாங்கிகுவிக்கிறாய்வரம்புமீறியே வாழநினைக்கிறாய்
இப்படி,,,,,,,,,,
பாவத்தின் பக்கம் மனதுபோவதேன்புண்ணிய வழியை மறந்துபோனதேன்மரணசிந்தனை மனதில் வரலையா இல்லைமரணமென்பதே நினைவில் இல்லையா.
இம்மையில் வாழ்வே சிலகாலம்தான்உண்மையில் வாழ்க்கைமறுமையில்தான் -இதைமனதில் கொண்டுயிங்கு வாழ்க்கை நடத்திடு மரணித்தப் பிறகுமறுமையில் ஜெயித்திடு....