செவ்வாய், 8 ஜூன், 2010

பிடிக்கவில்லை


பிடிக்கவில்லைஎனக்கு...இந்த அரசியலும்அதன் விஷ வேஷமும்...!பிடிக்கவில்லைஎனக்கு...இந்த நகரமும்அங்கே தூசிக் காற்றும்...!பிடிக்கவில்லைஎனக்கு...இந்த பணப் பேய்களும்மக்கிய மனித நேயமும்...!பிடிக்கவில்லைஎனக்கு...இந்த உழைக்காத வர்க்கமும்அதன் உழைப்புச் சுரண்டலும்...!பிடிக்கவில்லைஎனக்கு..நான் வாங்கிய பட்டமும்..அதன் மேல் சிலந்திக் கூடும்...!பிடிக்கவில்லைஎனக்கு...இந்த தியேட்டர் கூட்டமும்வீணாகும் முயற்சியும்...!பிடிக்கவில்லைஎனக்கு...பாழும் வறுமையும்..நொறுங்கிய மனங்களும்...!பிடிக்கவில்லைஎனக்கு...இந்த காதலும்அதன் சதைக் கவர்ச்சியும்...!பாதம் வருடிகெஞ்சுகிறேன் அம்மா...மீண்டும்தாயேன் -உன்கருப்பையில் இடம்...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.