வியாழன், 3 ஜூன், 2010

வலிக்கும் நியதி

வலி
பறித்த சிவப்பு ரோஜாவின்
காம்பில் ஈரமாய்க் கிடக்கிறது
இரத்தம் நிறமிழந்து
உறவு
அடிமாட்டுக்கு லாரி ஏறிய
மடிவற்றின மாட்டின் தலக்கயிறு
கனவில் இறுக்குகிறது கழுத்தை
நியதி
பூ மட்டுமா உதிர்கிறது
தேடிவரும் தேனீயின்
நம்பிக்கையும் தானே
முகம்
எத்தனை திருத்தியும்
ஏனோ நிறைவில்லை
சகிக்காத கண்ணாடியின் சாபம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.