ஞாயிறு, 6 ஜூன், 2010

படித்த சில 'கடி'கள்


'ஏங்க நமக்கு கல்யாணம் செஞ்சு வெச்ச புரோக்கர் செத்துப்போயிட்டாராம்'
'செஞ்ச பாவம் சும்மா விடுமா'


'தலைவர் ரொம்ப கோபமா இருக்காரே ஏன்?'
'கடைத் திறப்பு விழான்னு கூட்டிக்கிட்டுப் போய் 'சாக்கடை'யை திறக்க வெச்சுட்டாங்களாம்'


'நேத்து நீங்க வைர நெக்லேஸ் வாங்கி தர்ற மாதிரி கனவு கண்டேங்க..!'
'இன்னிக்கு வாங்கி போட்ட மாதிரி கனவு கண்டுறு'


'அவரு போலி டாக்டர்'னு எப்படி சொல்றே?'
'பல் ஆடுதுன்னு சொன்னா 'ஆட்டோட' பல்ல ஏன் வச்சிருக்கீங்க அப்படிங்கிறாரே


'வீட்டுச் சாப்பாடு கிடைக்கும்'னு ஹோட்டல் வாசல்ல போர்'டு வெச்சது தப்பாப் போச்சி?'
'ஏன்?'
'அதான் எங்க வீட்லேயே கிடைக்கும்'னு எவனோ எழுதி வெச்சுட்டுப் போய்ட்டான்'


'என்னங்க இது இவரு பாஸ்போர்ட வாங்க 'கோவணத்தோடு வந்திருக்காரு?'
'ஆவணத்துடன் வரவும் என்பதை தப்பா புரிஞ்சிக்கிட்டாரு'


'எதுக்கு சீரியல் பார்க்கிறப்ப உருட்டுக்கட்டை வெச்சுருக்கே?'
'கொஞ்சம் அசந்தா என் வீட்டுக்காரர் 'கிரிக்கெட்டுக்கு' மாத்திடுறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.