ஞாயிறு, 6 ஜூன், 2010

காதல் கவிதை

உன் ஒரு புன்னகை போதும்,புவி வெப்பமடைவதை தடுத்துவிடலாம்...

"லைலா" புயலாக என்னை தாக்கினாய்,உன் தாக்குதலில் " மஜ்சுனுவாக" நான் நிலை குலைந்து தான் போனேன்...

நீ என்னோடு இருந்தால்,என் இதயத்திற்குள் உன்னை "திடமாக" ஒளித்து கொள்வேன்...

நீ என்னை பிரிந்தால்,
"திரவமாக" என் கண்களில் கண்ணீராக வழிவாய்..............

என்னை வேண்டாம் என்று நீ சொன்னால்,காற்றில் "வாயுவாக" கலந்து விண்ணை நோக்கி சென்றுவிடுவேன் ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.