ஞாயிறு, 6 ஜூன், 2010

தருகின்ற பொருளா காதல் ?

உறவு

மகளாய் தங்கையாய் அக்காவாய் அண்ணியாய் தாயாய் எப்படியாகவும் இரு ஆனால் எனக்கு மனைவியாக மட்டுமில்லாமல்என்றென்றும் காதலியாகவும் இரு.
பரிசு
ஒரே பரிசை இருவரும் கொடுத்து பெற எவ்வாறு முடியும்என்ற வினாவிற்குவிடையாக வந்தது நம் குழந்தை.
காதல்
கடலளவு இருந்த நம் காதல் கடல் கடந்து போனதும் காற்றளவாகி போனது.
விதி
ஆழம் அதிமாக‌ அழுத்தம் அதிகமாகும் தூரம் அதிமாக‌காதல் அதிகமாகும்.
பஞ்ச்
கண்ணே இவை அனைத்தும் சேம்பிள் பீஸ் தான் நீ மட்டுமே வாசிக்கும்மாஸ்டர் பீஸ் என் மனதில் ஒளிந்து கிடக்கிறது மொழியற்று.
அர்த்தம்.
மூன்றெழுத்து கவிதை"காதல்"அதன் ஓரெழுத்து அர்த்தம்"நீ"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.