ஞாயிறு, 6 ஜூன், 2010

காதலாகி கண்ணீர் பெருக்கி...


க‌ட்டி வைத்த‌காத‌லெல்லாம் க‌ரையேற‌நினைக்கையில்'ம‌ற‌வாம‌ல் வ‌ந்துவிடு'அழைப்பிதழோடுஅழ‌காய் சிரிக்கிறாய் நீ!கைய‌சைத்துவிடைபெறுகிறாய் - நீவிட்டுப் பிரியும்வ‌ருத்த‌தில் க‌ல்லென‌ச‌மைகிறேன் நான்!இதழ் பிரியாமல்புன்னகைக்கிறேன்! - நீபிரிவதை தடுக்கஇயலாமல்....இமைகளும் சேரமறுக்கின்றனநம் பிரிவின் வலிகனவுகளால்புதிப்பிக்கப்படுமெனும்பயத்தில்..சொல்ல‌ நினைத்துசொல்லாம‌ல் விட்ட‌சொல்லெல்லாம்இப்போது ச‌பிக்க‌ப்ப‌ட்ட‌வைஎன் அக‌ராதியில்...என‌க்கென‌ ப‌டைக்க‌ப்ப‌ட்ட‌ நீபிற‌ர்கென‌ மாறுகையில்க‌ட‌வுளின் அரசியல்க‌ண்கூடாய் தெரிகிற‌து!இருந்தும்,இய‌லாமையெல்லாம்இர‌வுக்குள் இளகிக‌ண்ணீராய் த‌லைய‌ணைந‌னைக்கையில் புரிகிற‌துகாத‌லின் வ‌லி!!நீ வாழ்ந்து போனஎன் நேற்றைய நாட்கள்இனி,நம் நேசத்தின்வலியுணர்த்தும்வடுக்களாய் மட்டும்!கனவுகள் எல்லாம் கண்ணீராய் வடிந்தபின் நினைவு வந்துஉண்மை சுடுகையில்புரிகிறது!அய்யோ!அலுவலக பேரூந்துஇன்னும் அரைமணியில்!வாழ்க்கை ஓட்டத்தில்பந்தய குதிரையாய்கண்ணீரை மறந்தபடி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.