ஞாயிறு, 6 ஜூன், 2010

வானவில் உணர்வுகள்


உன்னால்தானடா மெய் மறந்தேன் என்றாய்பறந்தேன்ஹைட்ரஜனும் நைட்ரஜனும் புரியவில்லைஎன் ஆக்சிஜன் நீ என்றாய்குளிர்ந்தேன்ஒரு செல் உயிரியாம் அமீபாநாமோ ஈருடலில் ஓருயிர் என்றாய்நெகிழ்ந்தேன்மல்லி படர வேண்டுமாம் பந்தல்நீ படர நான் பந்தல் என்றாய்பரவசமானேன்பூமிக்கு துணையாய் நிலாஉன் வாழ்க்கை துணையாய் நான் என்றாய்வலுவானேன்ஆசைக்கு ஒன்று ஆஸ்திக்கு ஒன்று என்றாய்கனவு பெருங்கடலில்முழ்கினேன்மணப்பந்தல் என்றதும் என் குடியில் பிறந்தஇவரே என்னவர் என்றாய்நடை பிணமானேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.