ஞாயிறு, 6 ஜூன், 2010

அன்புள்ள அம்மாவுக்கு

உலகில் உறவுகள் ஆயிரம் உண்டுஉன்னத அம்மாவிற்கு ஈடு உண்டோ?கருவில் சுமந்த காலம் முதல் நம்மைகண்ணின் இமையாய் காப்பவள் ஒப்பற்ற தாய்தன் தூக்கம் துறந்து என்றும் குழந்தைதன் தூக்கம் காத்து வளர்த்தவள் தாய்தாலாட்டுப் பாடி தமிழ்மொழி ஊட்டியவர் தாய்சீராட்டி வளர்த்து சிறப்படையச் செய்தவள் தாய்தன்னலம் மறந்து குழந்தை நலம் பேணுபவள் தாய்தன்னிகரில்லா தியாகத்தின் திரு உருவச் சின்னம் தாய்பசி மறந்து குழந்தை பசி போக்குபவள் தாய்ருசி அறிந்து குழந்தை புசிக்கத் தருபவள் தாய்தன்னைத் தேய்த்து வாசம் தரும் சந்தனம் தாய்தன்னை உருக்கி ஒளி தரும் மெழுகு தாய்சும்மா வந்து போகும் உறவு அல்ல தாய்அம்மா நெஞ்சில் பதிந்த கல்வெட்டு உறவு தாய்உடலில் உயிர் உள்ள வரை மறக்கமுடியாது தாய்உணர்வு ஊட்டிய உன்னத உயர்ந்த உறவு தாய்பேசாத கல்லை வணங்குவது முடநம்பிக்கைபேசும் தாயை வணங்குவது தன்னம்பிக்கைகண்ணிற்கு புலப்படாத கடவுளை வணங்குவதை விடகண்ணிற்கு புலப்படும் தாயை வணங்கு உயர்ந்திடமனைவியை மதித்திரு தவறில்லை ஆனால்அம்மாவை துதித்திடு தவறில்லை சரியே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.