ஞாயிறு, 6 ஜூன், 2010

உன் மூடிய இமைக்குள்..!


உன் மூடிய இமைக்குள்கருவிழியாய் நான்..!தந்தங்கள் இழைத்த உன் கன்னத்தில்விழும் குழியாய் நான்..!உன் சந்திர வடிவ நெற்றியில்சூரியக் குங்குமமாய் நான்..!மூடி மறைத்த உன்மார்புகளுக்கிடையில்இறங்கும் வியர்வைத் துளிகளாய் நான்..!உன் வெண்சங்குக் கழுத்தில்பொன் மஞ்சள் நாணலாய் நான்..!கொழுத்த உன் வயிற்றினில்கொப்பூழாய் நான்..!உன் வாழைத் தண்டு கால்களில்ஒலிக்கும் கொலுசொலிகளாய் நான்..!மெல்லிய உன் கால் விரல்களில்ஒளிரும் மெட்டியாய் நான்..!இப்படி உன்னுள் அனைத்தும்நானாக விரும்புகிறேன்..!உன்னுள்ளும் உணர்ச்சிகள்உண்டென்பதை நானறிவேன்..!வாழ்க்கைக்காக நீ காத்திருந்ததுபோதும் கண்ணே..!உனக்காக ஒரு வாழ்க்கையேஇங்கு காத்திருக்கிறது..!நீ விதவையெனில் உனைநான் காதலிக்கலாகாதோ..!சகியே… சமூகம் ஒரு குப்பையடிஅது சாத்திரங்களின் நாற்றமடி..!உன் விதவைக் கோலத்தைத் துறந்திடுஉன் பழைய வாழ்வை மறந்திடுஎன் உணர்வுகளை நீயும் மதித்திடு…என்னுள் இரண்டறக் கலந்திடு..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.