சனி, 5 ஜூன், 2010

வெளிநாட்டு வாழ்க்கை!!


வளமையானவாழ்விற்காகஇளமைகளைதொலைத்ததுர்பாக்கியசாலிகள் !

வறுமை என்றசுனாமியால்அரபிக்கடலோரம்கரை ஒதுங்கியஅடையாளம் தெரிந்தநடை பிணங்கள் !

சுதந்திரமாகசுற்றி திரிந்தபோதுவறுமை எனும்சூறாவளியில் சிக்கியதிசை மாறிய பறவைகள் !

நிஜத்தை தொலைத்துவிட்டுநிழற்படத்திற்குமுத்தம் கொடுக்கும்அபாக்கிய சாலிகள் !

தொலைதூரத்தில்இருந்து கொண்டேதொலைபேசியிலேகுடும்பம் நடத்தும்தொடர் கதைகள் !

கடிதத்தை பிரித்தவுடன்கண்ணீர் துளிகளால்கானல் நீராகிப் போகும்மனைவி எழுதியஎழுத்துக்கள் !

ஈமெயிலிலும்இண்டர்நெட்டிலும்இல்லறம் நடத்தும்கம்ப்யூட்டர் வாதிகள் !

நலம் நலமறியஆவல் என்றால்பணம் பணமறியஆவல் என கேட்கும்ஏ . டி . எம் . மெஷின்கள் !

பகட்டானவாழ்க்கை வாழபணத்திற்காகவாழக்கையைபறி கொடுத்தபரிதாபத்துக்குரியவர்கள் !

ஏ . சி . காற்றில்இருந்துக் கொண்டேமனைவியின்மூச்சுக்காற்றைமுற்றும் துறந்தவர்கள் !

வளரும் பருவத்திலேவாரிசுகளைவாரியணைத்துகொஞ்சமுடியாதகல் நெஞ்சக்காரர்கள் !

தனிமையிலேஉறங்கும் முன்தன்னையறியாமலேதாரை தாரையாகவழிந்தோடும்கண்ணீர் துளிகள் !

அபஷி என்ற அரபிவார்த்தைக்குஅனுபவத்தின் மூலம்அர்த்தமானவர்கள் !

உழைப்பு என்றஉள்ளார்ந்த அர்த்தத்தைஉணர்வுபூர்வமாகஉணர்ந்தவர்கள்!முடியும் வரைஉழைத்து விட்டுமுடிந்தவுடன்ஊர் செல்லும்நோயாளிகள் !

கொளுத்தும் வெயிலிலும்குத்தும் குளிரிலும்பறக்கும் தூசிகளுக்கும்இடையில் பழகிப்போனஜந்துகள் !

பெற்ற தாய்க்கும்வளர்த்த தந்தைக்கும்கட்டிய மனைவிக்கும்பெற்றெடுத்த குழந்தைக்கும்உற்ற குடும்பத்திற்கும்உண்மை நண்பர்களுக்காகவும்இடைவிடாது உழைக்கும்தியாகிகள் !!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.