வெள்ளி, 18 ஜூன், 2010

ஏனோ இன்னும் தாமதம்....??ஓர் நாள்...... உன்னுடன்
ஒழுங்காய் பேசவில்லை எனில்..
ஒளியற்று போவதேனோ என் முகமே..!

என் செய்தாய் என் அன்பே
எப்பொழுதும் உன் நினைவே..!

உன் குரலில் தான் என் ஜீவன் உளதோ?
உன் வார்த்தையில் தான் என் வசந்தம் உளதோ?

கண் மூடி யாசித்தேன்....
கடிதம் ஒன்று நீ வரைந்தாய்..
வரைந்த கடிதத்தில்..
வடிவாக உன் முகம் கண்டேன்..!

எனை மீட்க எப்போது வருவாயோ?
ஏங்குகிறேன் உன் வரவிற்காய்....
ஏனோ இன்னும் தாமதம் என்னுயிரே..?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.