ஞாயிறு, 6 ஜூன், 2010

கவசம்


உன் இதழ்களை மலர் என்று
நினைத்து அமர வந்து வண்டு
முடியாமல் தவித்தது
நான் கொடுத்த முத்தம்
கவசமாய் இருப்பதால்...

வானவில் உணர்வுகள்


உன்னால்தானடா மெய் மறந்தேன் என்றாய்பறந்தேன்ஹைட்ரஜனும் நைட்ரஜனும் புரியவில்லைஎன் ஆக்சிஜன் நீ என்றாய்குளிர்ந்தேன்ஒரு செல் உயிரியாம் அமீபாநாமோ ஈருடலில் ஓருயிர் என்றாய்நெகிழ்ந்தேன்மல்லி படர வேண்டுமாம் பந்தல்நீ படர நான் பந்தல் என்றாய்பரவசமானேன்பூமிக்கு துணையாய் நிலாஉன் வாழ்க்கை துணையாய் நான் என்றாய்வலுவானேன்ஆசைக்கு ஒன்று ஆஸ்திக்கு ஒன்று என்றாய்கனவு பெருங்கடலில்முழ்கினேன்மணப்பந்தல் என்றதும் என் குடியில் பிறந்தஇவரே என்னவர் என்றாய்நடை பிணமானேன்.

காதல் போதை


அடுத்த முறைசெல் போனாய் பிறக்கவரம் வேண்டுகிறேன்அது கூடஉன் காதோடுரகசியம் பேசுவதால்.




தயவு செய்துஉன் பார்வையைவிலக்கு அன்பேநான் போதைக்குஅடிமையாகவிரும்பவில்லை.



மூன்று காதல் கவிதைகள்


பெண்ணே உன் அதிஷ்டம்

நான் உன்னை காதலிப்பதுஎன் இஷ்டம் !என் காதலை எற்றுக்கொண்டால்உனக்கு இல்லை நஷ்டம் !காதலை ஏன் ஏற்றுக்கொள்ளஉனக்கு கஷ்டம் ?என்னை நீ மறுத்தால் அதுஉன்னுடைய துரதிஷ்டம் !எந்த பெண்ணுக்கு உள்ளதோ ...என்னை மணக்கும் பேரதிஷ்டம் !


கவிதை

அவளைநான் காதலித்தப் போதுஎன் விரல் நுணிகள் கூடக் கவிதை எழுதும் !என் பேனாமுனைக்கூட அவளைப்பாடும் !தமிழ் எழுத்துக்கள் எனக்கு தோழியாகும் !ஒவ்வொரு வாக்கியமும்காவியம் படைக்கும் !அவள் என்னை காதலித்த போதுகவிதை எழுத மறந்து போக......பேனாவில் மையிருந்தும் எழுத தயங்க.....வார்த்தைகள் தெரியாமல் தமிழை மறக்க......மௌனமே மொழியாய் மாறி விட ......இதற்குக் காரணம் மட்டும்கவிதையாய் வந்தது !கவிதையே என்னைகாதலிக்கும் போதுகவிதை எழுதவார்த்தைகள் வேண்டுமா என்றது?காற்றில் வந்த என்கவி ( தேவ ) தையின் வாசகங்கள் !இதை விட சிறந்த கவிதை இல்லை என்றது கவிதையின் வர்தகங்கள் !

எதுவாய்?


நீ என்னை ஏற்காவிட்டால் என்ன...மீண்டும்மூங்கிலாய் பிறந்துபுல்லாங்குழலாய்உருமாறிஉன் இதழ் ஸ்பரிசம்பெறுவேன்மலராய் பூத்துஉன் கூந்தலில்அமர்வேன்மருதானியாய்உன் விரல்களையும்சிவக்கச்செய்வேன்வளையலாய்உன் கைகளோடுஉறவாடுவேன்புற்களாய்உன் பாதம் வருடுவேன்ஆனால்....."எதுவாய்" மாறிஉன் இதயத்தில் நுழைவது.

தருகின்ற பொருளா காதல் ?

உறவு

மகளாய் தங்கையாய் அக்காவாய் அண்ணியாய் தாயாய் எப்படியாகவும் இரு ஆனால் எனக்கு மனைவியாக மட்டுமில்லாமல்என்றென்றும் காதலியாகவும் இரு.
பரிசு
ஒரே பரிசை இருவரும் கொடுத்து பெற எவ்வாறு முடியும்என்ற வினாவிற்குவிடையாக வந்தது நம் குழந்தை.
காதல்
கடலளவு இருந்த நம் காதல் கடல் கடந்து போனதும் காற்றளவாகி போனது.
விதி
ஆழம் அதிமாக‌ அழுத்தம் அதிகமாகும் தூரம் அதிமாக‌காதல் அதிகமாகும்.
பஞ்ச்
கண்ணே இவை அனைத்தும் சேம்பிள் பீஸ் தான் நீ மட்டுமே வாசிக்கும்மாஸ்டர் பீஸ் என் மனதில் ஒளிந்து கிடக்கிறது மொழியற்று.
அர்த்தம்.
மூன்றெழுத்து கவிதை"காதல்"அதன் ஓரெழுத்து அர்த்தம்"நீ"

வெளிநாடுவாசியின் லீவு நாட்கள்.

கத்தை கத்தையாகபணம் அழித்தவன்கையில் எஞ்சி இருக்கும்சில்லறை காசுகளின்முக்கியத்துவத்தைபெற்று விடுகின்றனஊர் வந்தவனின்இறுதி விடுமுறை நாட்கள்.

காதலாகி கண்ணீர் பெருக்கி...


க‌ட்டி வைத்த‌காத‌லெல்லாம் க‌ரையேற‌நினைக்கையில்'ம‌ற‌வாம‌ல் வ‌ந்துவிடு'அழைப்பிதழோடுஅழ‌காய் சிரிக்கிறாய் நீ!கைய‌சைத்துவிடைபெறுகிறாய் - நீவிட்டுப் பிரியும்வ‌ருத்த‌தில் க‌ல்லென‌ச‌மைகிறேன் நான்!இதழ் பிரியாமல்புன்னகைக்கிறேன்! - நீபிரிவதை தடுக்கஇயலாமல்....இமைகளும் சேரமறுக்கின்றனநம் பிரிவின் வலிகனவுகளால்புதிப்பிக்கப்படுமெனும்பயத்தில்..சொல்ல‌ நினைத்துசொல்லாம‌ல் விட்ட‌சொல்லெல்லாம்இப்போது ச‌பிக்க‌ப்ப‌ட்ட‌வைஎன் அக‌ராதியில்...என‌க்கென‌ ப‌டைக்க‌ப்ப‌ட்ட‌ நீபிற‌ர்கென‌ மாறுகையில்க‌ட‌வுளின் அரசியல்க‌ண்கூடாய் தெரிகிற‌து!இருந்தும்,இய‌லாமையெல்லாம்இர‌வுக்குள் இளகிக‌ண்ணீராய் த‌லைய‌ணைந‌னைக்கையில் புரிகிற‌துகாத‌லின் வ‌லி!!நீ வாழ்ந்து போனஎன் நேற்றைய நாட்கள்இனி,நம் நேசத்தின்வலியுணர்த்தும்வடுக்களாய் மட்டும்!கனவுகள் எல்லாம் கண்ணீராய் வடிந்தபின் நினைவு வந்துஉண்மை சுடுகையில்புரிகிறது!அய்யோ!அலுவலக பேரூந்துஇன்னும் அரைமணியில்!வாழ்க்கை ஓட்டத்தில்பந்தய குதிரையாய்கண்ணீரை மறந்தபடி!

காதல் மழை ஏந்திழை


வசீகரிக்கப்பட்ட வார்த்தைகளெல்லாம் வரவு வைத்திருக்கிறேன் நாட்குறிப்பில்!நீ எதிரில் நிற்கையில் மௌனம் மட்டுமே சாத்தியமாகிறது என்ன செய்ய?


குடையின் ஆதரவில் நம்மை விட்டு விட்டு அத்தனையும் நனைத்துப் போனது மழை!காதலினால் கனன்ற காமம் தீப்பிடிக்கச் சாம்பலானது நாகரீக முகமூடி!


தோட்டத்துப் பூக்கள் மழையில் குளித்தன!காய்ச்சல் வந்ததெனக்கு என் பார்வையில் அவையெல்லாம் நீயானதால்!


பளீரென்ற மின்னல் வெளிச்சத்தில்மனதில் வந்து போகிறதுன் முகம்!சபிக்கிறேன் நான் மின்னலை சற்று நீடித்தாலென்னவென்று?


உன் இதழ்களை கவனித்தவாறே உரையாடுகிறேன் இப்போதெல்லாம்!உதிர்க்கும் சொற்களில் எப்போதாவது எனக்கான காதல் உதிராதாவென்று?


நீயும் நானும் தனித்திருந்த நேரத்தில் நமக்குள் நிலவிய அசைவுகளற்ற மவுனம் சொல்லாமல் சொல்லிப் போனது நம் கண(ன)ம் பொருந்திய காதலை!


ஆழியில் வசிக்கும் சிப்பியானது வானிலிருந்து மழைத்துளியொன்றை உள்வாங்கி முத்தாக்குமாம்!நீ தந்த முத்தமும் அதுபோலவே வெட்கத்தைத் தின்று நம்முள் காதலை கருவாக்கியது!

ஏன் என்று கேட்க யாருமில்லை......!

பக்கத்து வீட்டு யூதனைகைது செய்தார்கள்நான் ஏன் என்று கேட்கவில்லைஏன் என்றால்நான் யூதனில்லை......பக்கத்து வீட்டு கம்யூனிசவாதியைகைது செய்தார்கள்நான் ஏன் என்று கேட்கவில்லைஏன் என்றால்நான் கம்யூனிசவாதியில்லை.....இறுதியில்என்னைக்கைது செய்தார்கள்ஏன் என்று கேட்க்யாருமில்லை......!

வாழ்க்கை வாழ்வதற்கே......

பிறந்து விட்டோம்
வாழ்வதற்காகவே
வந்த பாதைகள் எல்லாம்
வேதனை முற்களால்
நிரம்பியிருக்கலாம்.
வலிகள் தொடரலாம்
வழி நெடுகே..
வழியில்
இடருகள் வந்தால்
முட்டிமோதி தள்ளிவிட்டு
பயனத்தை தொடரும்
தொடரூந்து போல
தொடரலாம்
நாம் போகும்
இடத்தை நோக்கி
மனதில் உறுதியாய்.....!
கண்னீர் வரலாம்
கண்கள் உள்ள்வரை
கவலைகள் வரலாம்
காலங்கள் உள்ளவரை
கண்னீரானாலும்
கவலைகளானாலும்
நிச்சயம்
ஓர் நாள்
மறையலாம்.
நம்பிக்கையாய்
நடைபோட்டால்.....!
இப்பயனம்
எத்தனை போராட்டமானது
இவ்வழியால் போனவர்கள்
சொல்லலாம்...
போய்ச்சேர்ந்தவர்கள்
யாவரும்
இவ்வழியை கடந்தவர்களே
இவ்வலியை கடந்தவர்களே.
இரவும் பகலும்
எம்மைத்தொடர்வது போல
இன்பமும்
துன்பமும்
எம்மைத்தொடரலாம்
செல்லும் இடம் வரை.
புன்னகை
ஒளியை வீசியவாரு
துன்ப இருளை
கடந்து செல்லலாம்
மழலை மனதோடு............!
நிழலுக்காய் ஏங்கும்
பாலைவன பயனியாய்
நிம்மதிக்காய்
தவிக்கிறது எமதுள்ளங்கள்.
கிடைத்தவறறை
பெற்றுக்கொள்ளுங்கள்.
நிச்சயம் ஓர்நாள்
நிழலும் வரலாம்
நிம்மதியும் வரலாம்
பாலைவனம்
பசுமையாகவும் மாறலாம்...
வெற்றியின் சுவை
வென்றவனுக்கே தெரியும்
வாழ்க்கையின் சுவை
வாழ்ந்தவனுக்கே தெரியும்.
வழி நெடுகே தொடருங்கள்
வாழ்க்கை
வாழ்வதற்கே......!

சும்மயிருக்க முடியாம கிறுக்கியவை....!

எல்லோரிடமும்எல்லாமும்இருக்கிறதுநல்லமனசைத்தவிர...!
ஓரே வழியாகவேபோய்வருகிறதுஇயந்திர வாழ்க்கைகடிகாரத்தைபோலவே...!

கணனிகளுக்குள்ளும்கைத்தொலைபேசிகளுக்குள்ளும்அடைப்பட்டுக்கிடக்கிறதுநம்விருந்தோம்பல்களும்நல விசாரிப்புகளும்...!

படித்தவனுக்குவேலையுமில்லைபசித்தவனுக்குஉணவுமில்லைஇதுதான்எம் தேசிய கீதமோ...!

நினைப்பவைகிடைப்பதுமில்லைகிடைப்பவைநினைப்பவையாகஇருப்பதுமில்லைஇதுதான் வாழ்கையா....!

வானம் போல்வாழ்ந்திட நினைத்தேன்இன்னும்கீழேதான்கிடக்கிறேன்பூமியாய்.....!

தேடிக்கொண்டிருக்கிறேன்இன்னும்வாத்தியாரிடம்சொன்னஎதிர்காலஇலற்சியங்களை...

படித்ததில் பிடித்த தத்துவங்கள் & நகைச்சுவைகள்

நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன என்ன தோன்றுகிறதோஅதுதான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும். - விவேகானந்தர்.=========================வெற்றி என்பது நிரந்தரமல்ல;தோல்வி என்பது இறுதியானதுமல்ல!=========================ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம்.ஒவ்வொரு நொடியும் துணிந்தால் நாம் ஜெயித்து விடலாம்.=========================நூறு வார்த்தைகள் வலியை ஏற்படுத்தாது; ஆனால்,ஒரு நல்ல நண்பனின் மவுனம்இதயத்தில் அதிகக் கண்ணீரை ஏற்படுத்தும்.=========================நல்ல முடிவுகள், அனுபவத்திலிருந்து பிறக்கின்றன;ஆனால் அனுபவமோதவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது. - பில் கேட்ஸ்=========================சிக்கல்கள் என்பவை, ஓடும் ரெயிலிலிருந்து பார்க்கும் மரங்களைப் போன்றவை.அருகில் போனால் அவை பெரிதாகத் தெரியும்.அவற்றைக் கடந்து சென்றால்அவை சிறிதாகிவிடும். இதுதான் வாழ்க்கை!=========================மேலாளர்: உன் தகுதி என்ன?சர்தார்: நான் Ph.Dமேலாளர்: Ph.Dன்னா என்ன?சர்தார்: Passed high school with Difficulty.=========================நானும் சரி ஒரு ரவுண்டுதானேன்னு இன்டர்வியூக்குப் போனேன்.அங்கே 5பேரும்மா.மாத்தி மாத்தி கேள்வி கேட்டாங்க.என்னால முடிஞ்ச வரைக்கும் பதில் சொன்னேன்.திடீர்னு ஒருத்தன் HRக்கு போன் போட்டுமச்சான் ஃபிரீயா இருந்தா வாடா.ஒருத்தன் சிக்கியிருக்கான்னு சொன்னான்.சரின்னு நானும் 4ஆவது மாடிக்குப் போனேன்.அங்கே 8 பேரும்மா.அவங்களால எவ்வளவு முடியுமோஅவ்வளவு கேள்வி கேட்டாங்க.நானும் எவ்வளவு நேரம் பதில் தெரிஞ்ச மாதிரியே நடிக்கிறது?அதுல ஒருத்தன் சொன்னான்இவன் எவ்வளவு கேள்வி கேட்டாலும் சமாளிக்கிறான்டாஇவன் ரொம்ப அறிவாளின்னு சொல்லிட்டாம்மா.=========================(தேர்வு அறையில்)ஆசிரியர்: டேய் என்னடா... கையில் ஃபார்முலா எழுதியிருக்கே?மாணவன்: எங்க கணக்கு வாத்தியார்தான் ஃபார்முலா எல்லாம் விரல் நுனியில்இருக்கணும்னு சொன்னார்.=========================விட்டுக் கொடுங்கள்; விருப்பங்கள் நிறைவேறும்.தட்டிக் கொடுங்கள்; தவறுகள் குறையும்.மனம் விட்டுப் பேசுங்கள்; அன்பு பெருகும்.=========================அறிவுக்கும் மனசுக்கு சிக்கல் இருக்கும் போது நீங்க மனசு சொல்வதை மட்டும்கேளுங்கள்.ஏன்னா அறிவு......சரி விடு. இல்லாததைப் பத்திப் பேச வேண்டாம்.=========================ஒண்ணு + ஒண்ணு = ரெண்டுநீதான் எனக்கு ஃபிரெண்டு.ரெண்டு + ரெண்டு = நாலுநீ ரொம்ப வாலு.மூணு + மூணு = ஆறுநீ இல்லாம போரு.நாலு + நாலு = எட்டுஎஸ்எம்எஸ் அனுப்பலன்னா குட்டு.=========================நட்பு எனும் கலையானது, ஒரு நல்ல இசைக் கருவியை வாசிப்பது போன்றது. முதலில் விதிகளின்படி இந்தக் கருவியை வாசிக்கத் தொடங்க வேண்டும். பிறகு விதிகளை மறந்துவிட்டு இதயத்திலிருந்து வாசிக்க வேண்டும். =========================கடவுள், நகைச்சுவையுடன் எழுதக்கூடிய ஒரு சிறந்த எழுத்தாளர். ஆனால் அவர், நகைச்சுவையுடன் நடிக்கத் தெரியாத மோசமான நடிகர்கள் பலரைக் கொண்டு தன் நாடகத்தை நடத்துகிறார்.=========================30 மாநிலங்கள்1618 மொழிகள்6400 சாதிகள்6 மதங்கள்6 இனங்கள்29 பெரிய பண்டிகைகள்ஒரு நாடு!இந்தியனாக இருப்பதற்காகப் பெருமைப்படுங்கள்!=========================உயிரின் சுவாசம் மூச்சுகண்களின் சுவாசம் கனவுஇதயத்தின் சுவாசம் துடிப்புநாக்கின் சுவாசம் பேச்சுஎன் நட்பின் சுவாசம் நீ=========================எனக்கு இட்லியைப் பிடிக்காதுதோசையைத்தான் பிடிக்கும்.ஏன்னா, இட்லி கூட்டமா வேகும்.தோசை சிங்கிளாத்தான் வேகும்.கூல்... =========================உதவும் கரங்கள் ஜெபிக்கும் உதடுகளைவிடச் சிறந்தது.- அன்னை தெரஸா.=========================வெற்றி என்பது நிரந்தரமல்ல;தோல்வி என்பது இறுதியானதுமல்ல!அதனால்,வெற்றிக்குப் பிறகுதொடர்ந்து உழைப்பதை நிறுத்த வேண்டாம்;தோல்விக்குப் பிறகுதொடர்ந்து முயல்வதை நிறுத்த வேண்டாம்!=========================எல்லாம் சில காலமே - ரமண மகரிஷி=========================கண்களைத் திறந்து பார்அனைவரும் தெரிவார்கள்.கண்களை மூடிப் பார்.உனக்குப் பிடித்தவர்கள் மட்டும் தெரிவார்கள்!=========================தோல்வியின் அடையாளம் தயக்கம்!வெற்றியின் அடையாளம் துணிச்சல்!துணிந்தவர் தோற்றதில்லைதயங்கியவர் வென்றதில்லை!=========================கையில் 10 ரோஜாக்களோடுகண்ணாடி முன் நில்லுங்கள்!இப்போது நீங்கள் 11 ரோஜாக்களைக் காண்பீர்கள்!அந்த 11ஆவது ரோஜா,உங்கள் புன்னகை!நீங்ள் இப்போது புன்னைப்பதை நான் அறிவேன்!=========================வெற்றியை விரும்பும் நமக்குத் தோல்வியைத் தாங்கும் மனம் இல்லை;தோல்வியைத் தாங்கும் மனம் இருந்தால் அதுவும் ஒரு வெற்றிதான்.=========================உங்களின் தோல்வி எங்கே ஒளிந்துள்ளது தெரியுமா?பிரச்சினைகள் வரும்போது அல்ல;பிரச்சினைகளைக் கண்டு நீங்கள்பயந்து விலகும்போது. - பாரதியார்=========================எவையெல்லாம் அழகாக இருக்கின்றனவோஎவையெல்லாம் அர்த்தத்துடன் இருக்கின்றனவோஎவையெல்லாம் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருமோஅவை அனைத்தும் உங்களுக்குக் கிடைக்கட்டும்!இன்றும் நாளையும் என்றும்.=========================இதை மெதுவாகப் படியுங்கள்:LIFEISNOWHEREஇதை எப்படிப் படித்தீர்கள்?LIFE IS NO WHERE என்றா?LIFE IS NOW HERE என்றா?நாம் பார்க்கிற விதத்தில்தான் வாழ்க்கை இருக்கிறது என்பதை இந்த ஒற்றை வரிஉணர்த்திவிடுகிறது!=========================மின்தடை ஏற்படும்போதுதான்நமக்கு மெழுதுவர்த்தி ஞாபகம் வருகிறது.அப்படித்தான் பிரச்சினைகளின் போதுஒரு நண்பர், தீர்வு என்னும் விளக்கேந்தி வருகிறார்.நான் உனக்கொரு மெழுகுவர்த்தியாக இருப்பேன்என்ற நம்பிக்கை எனக்குண்டு.=========================நீங்கள் ஒரு வாய்ப்பைத் தவறவிட்டால்உங்கள் விழிகளைக் கண்ணீரால் நிரப்பாதீர்கள்!உங்கள் கண்ணீர்,உங்கள் முன் உள்ள இன்னொரு வாய்ப்பை மறைத்துவிடும்!அழகிய புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள்!=========================ஒரு நாள், கடவுள் என்னைக் கேட்டார்:"இந்த நண்பர் இன்னும் எவ்வளவு காலம்உன்னுடன் இருக்க வேண்டும்?"நான் கண்ணீர் உகுத்தேன்.என் கண்ணீர்த் துளிஒரு பெருங்கடலில் விழுந்தது.நான் இப்போது கடவுளிடம் சொன்னேன்:"இந்தத் துளியை நீங்கள் கண்டுபிடிக்கும் வரை."=========================நீ மற்றவருக்கு வழிகாட்டி ஆவதற்காகப்பிறந்திருக்கிறாய்.ஏன் மற்றவர்களிடம் உன் வழிகாட்டியைத்தேடிக் கொண்டிருக்கிறாய்?இந்த உலகம்உன் வெற்றிக் கதையைப் படிக்கக்காத்துக்கொண்டிருக்கிறது.=========================பிறக்கும்போது தாயை அழவைக்கிறோம்இறக்கும்போது எல்லோரையுமே அழவைக்கிறோம்வாழும்போதாவதுஎல்லோரிடமும் சிரிக்கப் பழகுவோம்.=========================2 சொட்டு போட்டா அது போலியோ.4 சொட்டு போட்டா அது உஜாலா2880 சொட்டு போட்டா அது குவாட்டர்இதுதான் இன்னிக்கு மேட்டர்.=========================வியர்வைத் துளிகளும் கண்ணீர்த் துளிகளும்உப்பாக இருக்கலாம்.ஆனால்,அவைதான்வாழ்வை இனிமையாக மாற்றும்.=========================ஒவ்வொரு மாநிலப் பெண்களிடமும்ஒவ்வொரு சிறப்பு உண்டு.கேரளா: நீண்ட கூந்தல்.ஆந்திரா: கூரிய மூக்குமும்பை: செழுமையான கன்னங்கள்பஞ்சாப்: பளிச் என்ற நிறம்தமிழ்நாடு: ஒன்னுமே இல்லேன்னாலும் ஓவரா சீன் போடறது=========================நாம் அனைவரும் ஒரே அளவு திறமை பெற்றவர்கள் இல்லைஆனால்,நம் திறமையை வளர்த்துக்கொள்ளஒரே அளவு வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறோம்.- அப்துல்கலாம்.=========================ஓர் உண்மை:நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது,நீ யாரை விரும்புகிறாயோஅவரை நினைத்துக்கொள்வாய்!நீ துயரத்தில் இருக்கும்போது,உன்னை யார் விரும்புகிறாரோஅவரை நினைத்துக்கொள்வாய்!=========================ஒரு சிறிய கையசைப்பு, நம்மை அழவைக்கலாம்!ஒரு சிறிய நகைச்சுவை, நம்மைச் சிரிக்கவைக்கலாம்!ஒரு சிறிய அக்கறை, நம்மைக் காதலில் விழவைக்கலாம்!ஒரு சிறிய தொடுதல், நம் உணர்வைக் கூர்மைப்படுத்தலாம்!நானும் நம்புகிறேன்என் சிறிய குறுஞ்செய்தி,உனக்கு என்னை நினைவுபடுத்தலாம்!=========================உங்கள் இதயத்தில் மகிழ்ச்சிஉங்கள் ஆன்மாவில் புத்துணர்வுஉங்கள் வாழ்வில் வெற்றிஉங்கள் முகத்தில் புன்னகைஉங்கள் இல்லத்தில் அன்பின் நறுமணம்இவை அனைத்தும் உங்களுக்கு என்றும் கிடைக்கட்டும்!

எமது கற்பனை கவிதைகள்!

பெண்ணே !உன் ஓரப்பார்வை அம்புகளால் தாக்கப்பட்டுகாயம்பட்ட வேடன் நான் !உன் காந்தப்பார்வை வலை வீச்சீல் மாட்டித்துடிக்கும் மீனவன் நான் !உன் நினைவுகளுடன் உருகி, உனக்காகவே வாழ்ந்து, கனவுகளுடன் காத்திருக்கும் மூடன் நான் !

பெண்ணே !மரங்களுக்கு மழைக்காலம் போல்பறவைகளுக்கு குளிர்காலம் போல்விலங்குகளுக்கு கோடை காலம் போல்உன்னை நினைக்கும் ஒவ்வொரு காலமும் என்னில் வசந்த காலம் ! ஆனாலும் நீ என்னிடம் பேசியது இறந்தகாலம் !நான் எனக்குள் பேசுவது நிகழ்காலம் !உன் நினைவுகளால் என்னாகுமோ என் எதிர்காலம் !

பெண்ணே !உன் நினைவுகளின் வரவு என்னை விட்ட நீங்காத செலவு !உன்னால் தன்னம்பிக்கையை என்னுள் கூட்டிக்கொள்கிறேன் !உனக்கு பிடிக்காததை என்னில் கழித்துக்கொள்கிறேன் !உன்னை நினைத்தே என் திறமையை பெருக்கிக்கொள்கிறேன் !உனக்காகவே என் வாழ்க்கையை வகுத்துக்கொள்கிறேன் !என்றும் உன்னை எனக்கு 100 சதவீதம் பிடித்திருப்பதால்.....!

நினைவலைகள்..!


பெண்ணே !உன் கனவுகளே இல்லையென்றால் என்றோ நான் கண்மு்டியிருப்பேன் !உன் நினைவுகளே இல்லையென்றால் என்றோ நான் வீழ்ந்திருப்பேன் !உன்னை காணாமல் இருந்திருந்தால் எங்கேயோ காணாமல் போயிருப்பேன் !உன் நினைவால் என் நினைவில்லை !என்றுமே என்னில் உன் நினைவலை !உன் நினைவுகள் என்னை நிழலாய் பின்தொடர்ந்தாலும் உண்மை நிலையில் என் உள்ளத்தில் உன் உருவம் என்னில் கலந்ததால் நீ இன்றி என் நிழலில்லை ! உன் நினைவின்றி நான் இல்லை !

கனவுகள்...!

நண்பர்களே ! கனவு காணுங்கள்....! என்னைப்போல் கனவுகளில் கன்னி அவளை காணாதீர்,நினைவுகளை பெருக்கிடுவாள்...! நீராய், கானல் நீராய்... மறைந்திடுவாள்..!பொய்த்தோற்றம் போட்டுடுவாள்...!பொல்லாதவனாய் உன்னை ஆக்கிடுவாள்...!ஆழ்வாராய் இருப்பவனையும்,போக்கிரியாய் மாற்றிடுவாள்...!

நட்பின் பிரிவு


நட்பு மலர்கள்” பிரிவால்
வாடினாலும் அதன் “வாசம்”
என்றும் இதயத்தில் வீசும்...!
சிறகில்லா பறவையும்,
சிறகடித்து பறப்பதென்றால்
“நட்பு” எனும் இறகுகள்
இருப்பதினால் மட்டுமே...!

பாலில் கலந்த நீரைப்போல
எம்இரத்தித்தில் கலந்தது நம் நட்பு..!
பால்நீரிலிருந்தும் பாலை மட்டும்
பிரித்திடுமாம் அன்னப்பறவை...!
எம்இரத்தத்திலிருந்து
நம்நட்பை பிரிப்பதென்றால்...
எம்உயிர் இவ்வுலகை விட்டு
பிரிந்தால் மட்டுமே...!!

உன் மூடிய இமைக்குள்..!


உன் மூடிய இமைக்குள்கருவிழியாய் நான்..!தந்தங்கள் இழைத்த உன் கன்னத்தில்விழும் குழியாய் நான்..!உன் சந்திர வடிவ நெற்றியில்சூரியக் குங்குமமாய் நான்..!மூடி மறைத்த உன்மார்புகளுக்கிடையில்இறங்கும் வியர்வைத் துளிகளாய் நான்..!உன் வெண்சங்குக் கழுத்தில்பொன் மஞ்சள் நாணலாய் நான்..!கொழுத்த உன் வயிற்றினில்கொப்பூழாய் நான்..!உன் வாழைத் தண்டு கால்களில்ஒலிக்கும் கொலுசொலிகளாய் நான்..!மெல்லிய உன் கால் விரல்களில்ஒளிரும் மெட்டியாய் நான்..!இப்படி உன்னுள் அனைத்தும்நானாக விரும்புகிறேன்..!உன்னுள்ளும் உணர்ச்சிகள்உண்டென்பதை நானறிவேன்..!வாழ்க்கைக்காக நீ காத்திருந்ததுபோதும் கண்ணே..!உனக்காக ஒரு வாழ்க்கையேஇங்கு காத்திருக்கிறது..!நீ விதவையெனில் உனைநான் காதலிக்கலாகாதோ..!சகியே… சமூகம் ஒரு குப்பையடிஅது சாத்திரங்களின் நாற்றமடி..!உன் விதவைக் கோலத்தைத் துறந்திடுஉன் பழைய வாழ்வை மறந்திடுஎன் உணர்வுகளை நீயும் மதித்திடு…என்னுள் இரண்டறக் கலந்திடு..!

உன்னைப் போலவே அழகாய்த்தான்..!


தனியாக கிளைத்துமுளைத்திருக்கும்என்னுடைய பல்லைப் பார்த்து'அழகான தெற்றுப் பல்' என்றாய்..!அழகற்ற எனைப் பார்த்து'அழகின் சிகரமே' என்றாய்..!என் சாதாரண நடையைக் கூட'அழகு மயில்' நடையென்றாய்..!ம்ம்ம்… உன்னைப் போலவேஅழகாய்த்தானிருக்கிறது…நீ சொல்லும் பொய்களும்..!

என்றும் நீ என்னோடுதான்

என்னைவிட்டு நீ பிரிந்தாலும்என்றும் நீ என்னோடுதான்உன்னைப் பற்றிய நினைவுகள்எந்தன் உயிரில் கலந்த உறவுகள்உயிர் உடல் விட்டு பிரியும் வரைஉன் நினைவு என்னை விட்டு அகலாதுபசுமாடு இரையை அசைபோடும்பாவை உன் நினைவை அசைபோடும் நான்பசுமரத்து ஆணி போல பதிந்ததுபாசம் மிகுந்த உந்தன் பரவச விழிகள்கணினியில் நிற்கும் முகப்புப்படம் போலகாளை எந்தன் இதயத்தில் நிற்கும் நின் உருவம்ஒலி நாடாவில் பாடல் கேட்டு இன்புறுவது போலஉந்தன் நினைவுகளை நினைத்து இன்புறுகிறேன்வாழ்வில் நடந்த நிகழ்வுகள் ஆயிரம்வஞ்சி உன் சந்திப்பு நிகழ்வு கல்வெட்டானதுஆயிரம் மைல்களுக்கு அப்பால் நீ வாழ்ந்தாலும்அருகில் என் அருகில் நினைவில் வாழ்கிறாய்என்னைப் போல எப்போதும் நினைக்காவிட்டாலும்என்னை நீ எப்போதாவது நினைப்பாய் நிஜம்உன்னைப் பார்க்க நீ தடைவிதிக்கலாம்உன்னை நினைக்க நீ தடைவிதிக்க முடியாது.